சின்னத்திரை நெடுந்தொடர்களில் நடிப்பதை குறைத்து உங்கள் தலைவரின் வெற்றிக்காக பாடுபட இருக்கிறேன் என்றார் ராதிகா.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது என அந்தியூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ‘நான் இதுவரை எனது தொழில் காரணமாக அரசியலில் முழுமையாக ஈடுபடவில்லை. ஆனால் இந்த தேர்தலில், சின்னத்திரை நெடுந்தொடர்களில் நடிப்பதை குறைத்து உங்கள் தலைவரின் வெற்றிக்காக பாடுபட இருக்கிறேன். தேர்தல் காலத்தில் கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ராதிகா, உழைப்பால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும். வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது என்ற மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், அல்லது மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், அந்தியூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to : news 18