இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் காரையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முகம்மது நபிகள் குறித்து பாஜக பிரமுகர் இழிவாக பேசியதாக தமிழகத்தின் பல இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்திலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
நபிகள் நாயகத்தை இழிவாகப் பேசியதாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கல்யாணராமன், நபிகள் நாயகம் பற்றி இழிவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைக் கண்டித்தும் கல்யாண ராமனை கைது செய்யக் கோரியும் சென்னை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு மாவட்டம் கோபி பேருந்து நிலையத்தில் கல்யாணராமனைக் கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைப் போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் காரையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி அர்ஜுன் சம்பத் காரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
கல்யாணராமனின் பேச்சினால் பல இடங்களில் போராட்டம் ஏற்பட்டுள்ளது.
thanks to : news 18