திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 30 நாட்களில் 234 தொகுதிகளிலும் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோயிலூர் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 10 மணியளவில் நடைபெறும் முதல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது, திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், கீழ்பெண்ணாத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை ஸ்டாலினிடம் வழங்க உள்ளனர்.
இந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு வருகை தந்த ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான கீழ்பெண்ணாத்தூரில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு பெண்கள் அணிவகுத்து நின்ற கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
கேரள செண்டை மேளம், பறை இசையுடன் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்ட ஸ்டாலின், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஆயிரக்காணக்கான தொண்டர்களிடம் சால்வைகளை பெற்றுக் கொண்டார்.
THANKS TO : NEWS 18