Thursday , July 29 2021
Breaking News
Home / தமிழகம் / தமிழகத்தில் ஒரு கை பார்க்கும் ராகுல்காந்தி…

தமிழகத்தில் ஒரு கை பார்க்கும் ராகுல்காந்தி…

தமிழகத்தில் மூன்றாவது நாள் தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறுமியுடன் செல்பி ராகுல் காந்தி எடுத்துக்கொண்டார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி தமிழகத்தில் மூன்று நாள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 23-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி இன்று வரை கொங்கு மண்டலப் பகுதிகள் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கரூரில் பேசிய ராகுல் காந்தி, ‘தமிழ்நாட்டு மக்களுடனான உறவு அரசியல் ரீதியிலானது அல்ல. குடும்ப, பாரம்பரிய ரீதியிலானது. இந்தியாவை பிரதமர் மோடி பலவீனப்படுத்தி, மக்களை பிரிக்க பார்க்கிறார்.

நாட்டை 5 பெரும் கார்ப்பரேட் நிறுவனங்காக ஆட்சி நடத்துகிறார்.

தேசத்தின் முதுகெலும்பான விவசாயத்தையும் அழிக்கப் பார்க்கிறார். மூன்று வேளாண் சட்டங்களால் விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பார்க்கிறார்.

ஒரே மொழி, ஒரே தேசம் என்றால் தமிழ், பெங்காலி உள்ளிட்டவை இந்திய மொழிகள் இல்லையா? தமிழ்நாட்டின் கலாச்சாரம் இந்திய கலாச்சாரம் இல்லை. தமிழ், பெங்காலி, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும். நாட்டின் பன்முகத் தன்மையை காக்க வேண்டும்.சிபிஐ, அமலாக்கத்துறைகளைப் பயன்படுத்தி தமிழ்நாட்டு முதலமைச்சர், அமைச்சர்களை மிரட்டி கட்டுப்படுத்தி வருகிறார்கள். பிரதமர் தமிழ்நாட்டை ரிமோட் கண்ட்ரோல் பண்ண பார்க்கிறார்.

தமிழக அரசை மிரட்டி, கட்டுப்படுத்தி வைத்திருப்பது போல் தமிழ் மக்களை கட்டுப்படுத்த முடியாது. தமிழ் மக்கள் சுயமாக முடிவெடுப்பார்கள். யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள் என்றார்.
தொடர்ந்து  கரூர் பஸ் ஸ்டான்ட் காமராஜர் சிலைக்கு மாலையணிவித்த பிறகு  ராகுல் காந்தி பேசுகையில்,
தமிழகத்தை பற்றி இன்னும் புரிந்து கொள்ள விரும்புகிறேன். இதற்காக 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்குறளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். தமிழகத்தின் ஆன்மா என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இதில் எழுதப்பட்டுள்ளது.

நம்பிக்கை, சுயமரியாதை தமிழக மக்களுக்கு புதிதல்ல. இது மொழியிலும் கலாச்சாராத்திலும் இரண்டர கலந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி இவற்றை மதிப்பதில்லை. இந்த திருக்குறள் புத்தகத்தை பிரதமர் பிரித்து கூட பார்த்திருக்க மாட்டார். இந்த புத்தகத்தை படித்திருந்தால் தமிழக மக்கள் கலாச்சாரம் பற்றி புரிந்திருப்பார். உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ள இதை விட வேறு வழி இல்லை.

ஒரு மடங்கு அன்பு செலுத்தினால் தமிழக மக்கள் இருமடங்காக திருப்பி செலுத்துவார்கள். பிரதமர் மோடி ஒரு தேசம் ஒரு கலாச்சாரம் ஒரே வரலாறு என சொல்லி அவமதிக்கிறார்.

தமிழ் மொழி இல்லையா, தமிழக மக்களுக்கு கலாச்சாரம் இல்லையா?  தமிழ்நாடு இந்தியாவிற்குள் தானே இருக்கிறது.
தமிழக அரசின் ஊழலை ஏன் இதுவரை சிபிஐ விசாரிக்கவில்லை.

ரிமோட் கன்ட்ரோல் மூலம் தமிழக அரசை மோடி இயக்குகிறார். வரும் தேர்தலில் அந்த ரிமொட் பேட்டரியை தமிழக மக்கள் கழட்டி எறிய போகிறார்கள்.  மத்திய அரசை எதிர்த்து தமிழக முதல்வர் கேள்வி கேட்கவில்லை. அவரது ஊழலில் இருந்து காக்கவே அவர் மவுனம் காக்கிறார்’ என்று தெரிவித்தார்.

செல்பி எடுக்க முயன்ற இளம்பெண்ணை ராகுல் தனது பிரச்சார வாகனத்தின் மீது கையைப் பிடித்து ஏற்றி, செல்போனை வாங்கி அவரே செல்பி எடுத்து கொடுத்தார்.

கரூர் பேருந்து நிலையம் அருகே ராகுல் காந்தி பிரச்சாரத்தில் மக்கள் கூட்டத்தில் முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார்.

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் தென்னந்தோப்பில்  விவசாயிகளைச் சந்தித்து ராகுல் காந்தி பேசினார்.
முன்னதாக சிறிது தூரம் மாட்டு வண்டியில் பயணித்தார். மாட்டு வண்டியை கரூர் எம்.பி ஜோதி மணி ஓட்டினார். காங்கிரஸ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் உடன் பயணித்தனர்.

ராகுல் காந்தி பிரச்சார கூட்டத்தில் காத்திருந்த சின்னதாராபுரம் சவுகத் அலி என்கிற முதியவர் மயக்கமடைந்தார். உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பிற்பகல் 3 மணியளவில் மண்மங்கலம் பகுதியில் மண்பானை சமையலை ருசித்து சாப்பிட்டார். இடையில் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி மக்களைச் சந்தித்து உரையாடினார்.

Thanks to : news 18

About Veetri Rajkumar

Check Also

தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..

அதிமுகவினர் அவரவர் வீட்டு வாயிலில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by