Wednesday , March 3 2021
Breaking News
Home / தமிழகம் / பறவைக் காய்ச்சல் எதிரொலியால் சரியும் கறிக்கோழி, முட்டை விலை..

பறவைக் காய்ச்சல் எதிரொலியால் சரியும் கறிக்கோழி, முட்டை விலை..

பறவைக் காய்ச்சல் அச்சத்தால் பல்லடத்தில் கறிக்கோழி விலை கடந்த 4 நாட்களில் கிலோவுக்கு 21 ரூபாய் குறைந்துள்ளது. நாமக்கல்லில் முட்டை விலை 20 காசு சரிந்துள்ளது.

பறவைக் காய்ச்சல் அச்சத்தால் பல்லடத்தில் கறிக்கோழி விலை கடந்த 4 நாட்களில் கிலோவுக்கு 21 ரூபாய் குறைந்துள்ளது. நாமக்கல்லில் முட்டை விலை 20 காசு சரிந்துள்ளது.

பறவைக் காய்ச்சல் அச்சம் மற்றும் விற்பனை மந்தம் போன்ற காரணங்களால் பல்லடத்தில் கறிக்கோழி விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

கடந்த 18-ம் தேதி கறிக்கோழி விலை கிலோ 81 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 21 ரூபாய் சரிந்து, 60 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நாமக்கல்லிலும் முட்டை கொள்முதல் விலை மேலும் 20 காசு சரிந்து, 4 ரூபாய் 5 காசுகளாக உள்ளது. கடந்த 15 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 90 காசுகள் குறைந்துள்ளது.

Thanks to : news 18

About Veetri Rajkumar

Check Also

20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்..

வட மாநிலங்களில் திருக்குறள் பெருமையாகப் பேசப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் திருக்குறளை முன்னுதாரணம் காட்டி பேசும் நிலையை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by