அரசு கல்லூரிகளில் பணிபுரியும் நபர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் குறைகளை பதிவேற்றக்கூடாது.
அரசு கல்லூரிகளில் பணிபுரியும் நபர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் குறைகளை பதிவேற்றக்கூடாது என்றும், மீறினால் சைபர் கிரைம் நடவடிக்கை பாயும் எனவும் கல்லூரி கல்வி இணை இயக்குநர் ராமலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து அரசு கல்லூரிகள் மற்றும் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரி மண்டல அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் குறைபாடுகளை வாட்ஸ் அப் குழுக்களில் பதிவு செய்யக்கூடாது. என்றும், துறையின் மேல் அலுவலர்களிடம் மட்டுமே முறையிட வேண்டும் இதனை கடைபிடிக்காதவர்கள் மீது “சைபர் கிரைம்” மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to : news 18