Monday , May 10 2021
Breaking News
Home / தமிழகம் / 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இந்த 4 மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. 13-ம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம், புவனகிரியில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரள கடலோரம், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு, 2 நாட்களுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Thanks to : news 18

About Veetri Rajkumar

Check Also

இளைஞர்களுடன் மய்யம் கொண்டுள்ளது வருகிற சட்டமன்ற தேர்தல் 2021….

மக்கள் நீதி மய்யத்துடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2021 சந்திக்க இருக்கிறது என்று மக்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by