பறவைக் காய்ச்சல் தடுப்பு பணிக்காக 1061 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் பரவலை தொடர்ந்து, தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கேரள மாநில எல்லையில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களின் எல்லையில் 26 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள கோழிப்பண்ணைகள் கால்நடைத்துறை அதிகாரிகளால் காலை, மாலை இரு வேளையும் கண்காணிக்கப்படுவதாகவும், கேரளாவில் இருந்து கோழி, வாத்து, உள்ளிட்ட பறவைகள் விற்பனைக்கு கொண்டுவருவது தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உபகரணங்களுடன் 1061 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழு 24 மணிநேரமும் செயல்பட்டு கோழிப்பண்ணைகள், பறவைகள் சரணாலயங்களை கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கோழிகள் பெரிய அளவில் சந்தேகத்திற்குரிய திடீர் மரணங்கள் நிகழ்ந்தால் 0422 – 2397614 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Thanks to : news 18