Thursday , July 29 2021
Breaking News
Home / தமிழகம் / இன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு!!

இன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 63,182 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 21,38,704 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 1,99,749 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,504 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 1,43,297 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.

இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3,320ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 1,299 பேருக்கும், செங்கல்பட்டில் 419 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 349 பேருக்கும், மதுரையில் 326 பேருக்கும், திருவள்ளூரில் 378 பேருக்கும், விருதுநகரில் 424 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Thanks to : news 18

About Veetri Rajkumar

Check Also

தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..

அதிமுகவினர் அவரவர் வீட்டு வாயிலில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by