Tuesday , October 20 2020
Breaking News
Home / தமிழகம் / தமிழகத்தில் புதிய உச்சம் ஒரேநாளில் 6,472 பேர் பாதிப்பு !!

தமிழகத்தில் புதிய உச்சம் ஒரேநாளில் 6,472 பேர் பாதிப்பு !!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இன்று 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் 20,75,522 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 1,92,964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3,232 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 5,210 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 1,36,793 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.

Thanks to : news 18

MyHoster

About Veetri Rajkumar

Check Also

கருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர்…

Balamurugan R from Jallipatty Village, Karur District. செல். 9344224247 கருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by