Wednesday , January 20 2021
Breaking News
Home / தமிழகம் / தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!!

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 4,807 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, ’இன்று ஒரு நாளில் 47,179 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரையில் 18,04,177 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள 4,731 பேருக்கும், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 76 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 4,807 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 1,65,714 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும், கொரோனா பாதிப்பு 3,049 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரையில் 1,13,856 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் 2,403 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 1,219 பேருக்கும் செங்கல்பட்டில் 323 பேருக்கும் திருவள்ளூரில் 370 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Thanks to : news 18

About Veetri Rajkumar

Check Also

விஜய் சேதுபதி… ஜோடியாகும் கத்ரினா கைஃப்?

விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by