2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தனி ஒருவன். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்த இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தனி ஒருவன். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்த இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
ஜெயம் ரவியின் சினிமா வரலாற்றிலேயே 75 கோடி வசூல் செய்த முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முக்கிய காரணம் அரவிந்த்சாமி நடித்த அந்த வில்லன் கதாபாத்திரம் தான்.
Advertisement: 4:39
VDO.AI
விரைவில் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க போவதாக மோகன்ராஜா ஏற்கனவே அறிவித்திருந்தார். அது ஜெயம் ரவியின் 25வது படமாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஸ்கிரிப்ட் தயார் செய்ய நேரம் எடுத்ததால் 25வது படமாக பண்ண முடியவில்லை. ஆனால் அடுத்ததாக ஜெயம் ரவி நடிக்கும் படம் தனி ஒருவன்-2 தான். மேலும் இந்த படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.
இந்த முறை வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமிக்கு பதிலாக பிரபல மலையாள நடிகர் மம்முட்டி நடிக்க உள்ளாராம். இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அரவிந்த்சாமி கதாபாத்திரத்தை விட மம்முட்டியின் கதாபாத்திரம் இரண்டு மடங்கு வலுவானதாக உள்ளதாம். ஜெயம் ரவியின் கேரள மார்க்கெட்டை அதிகப்படுத்த இந்த யுக்தியை கையாள போகிறாராம் மோகன் ராஜா.
ஆனால் அரவிந்த் சாமிக்கு மாற்று கதாபாத்திரம் சரியாக வருமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. இருந்தாலும் மம்முட்டியும் மிகப்பெரிய நடிகர் தான். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஊரடங்கு தளர்வுக்கு பின் வெளிவரும் என தெரிகிறது.
thanks To: Cinema peetai