கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் ஆரம்பம் முதலே தி.மு.க எம்.பி கனிமொழி நீதிவேண்டும் என்று குரல் எழுப்பிவருகிறார். இந்தநிலையில், தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் கனிமொழி புகார் அளித்துள்ளார்.
அதில், சந்தேகத்துக்கிடமான முறையில் தந்தை, மகனும் உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மனித உரிமை மீறல் நடந்துள்ள சாத்தான்குளம் சம்பவத்தில் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உரிய உத்தரவை பிறப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்கும் வாசகங்கள் அடங்கிய முகக்கவசத்தையும் கனிமொழி அணிந்துள்ளார்.
Thanks To: News 18