
மாணவர்கள் மற்றும் ஆசியர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கும் ‘ஸ்கூல் ஃப்ரம் ஹோம்’ கடையை அறிமுகபடுத்திய அமேசான்..
ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான்.இன் வியாழக்கிழமை தனது புதிய ‘ஸ்கூல் ஃப்ரம் ஹோம்’ கடையை தனது தளத்தில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதில், புதிய கடை நேரலையில் உள்ளது. மேலும், இது வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்களுக்கான க்யூரேட்டட் பொருட்களுடன் வருகிறது.
பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவுவதற்காக அத்தியாவசியங்கள், எழுதுபொருள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிசிக்கள், ஹெட்செட் மற்றும் ஸ்பீக்கர்கள், அச்சுப்பொறி மற்றும் வீட்டு அலங்காரங்கள் போன்றவற்றில் பலவிதமான தயாரிப்புகளை இந்த ஸ்டோர் வழங்குகிறது.
Thanks to zeenews.india