Sunday , April 11 2021
Breaking News
Home / இந்தியா / டிரம்புக்கு எதிராக திரும்பிய.. காலின் பாவெல்..

டிரம்புக்கு எதிராக திரும்பிய.. காலின் பாவெல்..

நியூயார்க்: ஏகப்பட்ட கனவில் மூழ்கி திளைத்து வந்தார் அதிபர் டிரம்பின்.. அந்த அத்தனை ஆசைகளிலும் மண் விழுந்து வருகிறது.. வரக்கூடிய அதிபர் தேர்தலில் டிரம்புக்கு வாக்களிக்க போவதில்லை என குடியரசு கட்சியைச் சேர்ந்த காலின் பாவெல் அறிவித்துள்ளார். இதனால் டிரம்புக்கு டென்ஷன் எகிறி உள்ளது! அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.. இதற்குதான் பல வகைகளில் தன்னை தயார் படுத்தி வந்தார் டிரம்ப்.. திரும்பவும் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கனவில் இருந்து வருகிறார்.

இந்த சமயத்தில்தான் கொரோனா நுழைந்தது.. ஆரம்பத்தில் அந்த வைரஸை கண்டுகொள்ளவே இல்லை.. கொரோனாவைரஸை தடுக்க இவர் சரிாயான நடவடிக்கை எடுக்கவில்லை. அலட்சியம் காட்டினார். இதனால் அமெரிக்காவில் மிகப் பெரிய உயிரிழப்பு ஏற்பட்டது. மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். கொத்து கொத்தாக பலர் மடிவதை பார்த்தபோதுதான் அதிபருக்கு நாளடைவில்தான் லேசாக அடிவயிற்றில் பீதி கிளம்பியது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த தேர்தல் நடைபெறுமா என்பதில் சந்தேகமாக இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என்று டிரம்ப் பிடிவாதமாக சொல்லிவிட்டார். எத்தனை பேர் இறந்தாலும், பொருளாதாரம் அதல பாதாளத்தில் தொங்கினாலும், தான்தான் அடுத்த அதிபர் என்பதில் படு உறுதியாக இருக்கிறார். வைரஸ் பரவல் இன்னும் அதிகமாகும் என்று எச்சரிக்கப்பட்டும்கூட, லாக்டவுனை தளர்த்துவதிலேயே அவர் குறியாக இருந்து வருகிறார். இந்த சமயத்தில்தான், கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொலை விவகாரம் வெடித்தது.. ஒரு கொலை, உள்நாட்டு போராக வெடிக்கும் என்பது மட்டுமல்ல, உலகம் தழுவிய நிறவெறி, இனவெறிக்கு எதிராக இப்படி திரண்டு வந்து நிற்கும் என்று அதிபர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. புரட்சிகளும், போராட்டங்களும் வெடிப்பதை பார்த்து மலங்க மலங்க விழித்து கொண்டிருக்கிறார்.

என்னென்னவோ மிரட்டல் விடுத்து பார்க்கிறார்.. சொந்த நாட்டில் ஒருத்தரும் இவர் பேச்சை கேட்கவில்லை.. கொரோனா உயிரிழப்பு & ஜார்ஜ் கொலை இரண்டுமே டிரம்ப்பின் அதிபர் கனவை நொறுக்கி கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் எல்லாம் அதிபருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், இப்போது இன்னொரு ஷாக் டிரம்புக்கு தரப்பட்டுள்ளது.. அந்த ஷாக் முக்கியமான கட்சியில் இருந்தே டிரம்புக்கு வந்ததுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

குடியரசு கட்சியைச் சேர்ந்த காலின் பாவெல் சிஎன்என் மீடியாவுக்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், “போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை அழைப்பேன் என்று சொல்லி இருக்க கூடாது.. அது தவறானதும்கூட.. இந்த நாட்டில் ஒரு அரசியலமைப்பு இருக்கிறது… அந்த அரசியலமைப்பை அனைவரும் பின்பற்ற வேண்டியது நம் கடமை.. ஆனால் அதிபர் மட்டும் அதிலிருந்து வேறு பாதைக்கு செல்கிறார்.. திசை மாறி போகிறார்.. அவரது பேச்சு, அமெரிக்க ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த வருஷம் நடக்க போகும் அதிபர் தேர்தலில் நான் டிரம்பை ஆதரிக்க முடியாது.. கண்டிப்பாக முடியாது.. நான் சமூகம் தொடர்பான விஷயத்திலும், அரசியல் தொடர்பான விஷயத்திலும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனுடன் இணக்கமாக இருக்கிறேன்.. எங்கள் நெருக்கம் அதிகமாக இருக்கிறது.. காரணம், நானும் அவரும் 35-40 வருஷமாக ஒன்றாக பணிபுரிந்து வருகிறோம்… வரப்போகும் தேர்தலில் அவர் அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட போகிறார்.. அதனால் நான் அவருக்குதான் வாக்களிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். காலின் பாவெல் முன்னாள் உள்துறை அமைச்சரும் கூட. 83 வயதாகிறது.. அமெரிக்க ராணுவத்தில் முன்னணி பொறுப்பிலிருந்தார்.. அதற்கு பிறகுதான் குடியரசு கட்சியில் இணைந்தார்.. சென்ற முறையே அதாவது 2016-ம் ஆண்டுகூட அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு இவர் வாக்களிக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

ஆக மொத்தம் பார்த்தால் டிரம்புக்கு அவரை சுற்றிலுமே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.. அவரது 2வது மனைவி, மகளே எதிர்ப்பு காட்டுகிறார்கள்.. போலீஸ் கமிஷனரே டிரம்பை “வாயை மூடுங்கள்” என்று எச்சரிக்கிறார்.. நம்பிக்கைக்குரிய பாவெல்லும் ஓட்டு போட மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.. அதிபருக்கு எதிரி வெளியாட்கள் இல்லை.. தன்னை சுற்றிலும் உள்ளவர்களே.. இதெல்லாம் பார்த்தால் டிரம்பின் கனவு தகர்ந்து வருவதுபோலவே கண்ணுக்கு தெரிகிறது. மொத்தத்தில் டிரம்ப் வாய்க்கு.. வாஸ்து இப்போ சரியாக இல்லை..!

Thanks To: One india tamil

About Veetri Rajkumar

Check Also

கரூரில் அமைந்துள்ள எஸ்பிஐ காலனி அருகே சக்தி நகரின் தெருமுனை மூடப்பட்டிருக்கும் நிலை – கரூர் நகராட்சி நிர்வாகம் தலையிடுமா?

கரூரில் எஸ்பிஐ காலனி அருகே சக்தி நகரில் ராஜ வாய்க்கால் அருகே சக்தி நகரின் தெருமுனை மூடப்பட்டு பொதுமக்களுக்கு நடக்கமுடியாமல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by