
தல அஜித் நடித்த படங்களில் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதற்கு காரணம் அந்த படங்களில் ஸ்டைலான மேக்கிங் தான்.
இன்னும் சொல்லப்போனால் அஜித்தை ஸ்டைலிஷான நடிகர் ஆக மாற்றிய பெருமை விஷ்ணுவர்தனுக்கு உண்டு. ஆரம்பம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணையாமல் போனது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.
தற்போது அந்த வருத்தத்தை ஊரடங்கு காலம் ரசிகர்களை போக்கியுள்ளது. மீண்டும் தல அஜித் விஷ்ணுவர்தன் கூட்டணியில் ஆரம்பம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. கண்டிப்பாக இந்த படத்திற்கும் இசை யுவன் சங்கர் ராஜா தான்.
விஷ்ணுவர்தன் தற்போது பாலிவுட் சினிமாவில் பிசியாக இருப்பதால் அந்த படத்தை முடித்தவுடன் ஆரம்பம்2 படத்திற்கான வேலைகளை தொடங்க உள்ளாராம். வலிமை படத்திற்கு பிறகு அஜித் விஷ்ணுவர்தன் படத்தில் தான் நடிப்பார் என்கிறது அவரது வட்டாரம்.
நீண்ட நாளாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கூட்டணி இணைவதால் இந்த செய்தி இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தல அஜித்துக்கு இந்த கதை மிகவும் பிடித்துள்ளதால் கண்டிப்பாக வலிமை படத்திற்கு பிறகு இது தான் செய்யப் போகிறோம் என விஷ்ணுவர்தனுக்கு உறுதி கூறியதாக அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளது…
Thanks To: Cinema Pettai