Wednesday , January 20 2021
Breaking News
Home / சினிமா / ஜூன் 22 தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..

ஜூன் 22 தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..

தளபதி விஜய் ரசிகர்கள் எப்போதுமே விஜய்யின் பிறந்த நாளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அசத்தி அனைத்து நடிகர்களையும் வியக்க வைப்பார்கள். அந்த வகையில் இந்த வருடமும் விஜய்யின் பிறந்த நாளுக்கு நிறைய பிளான் செய்து வைத்துள்ளனர்.

அதேபோல் விஜய் அவரது ரசிகர்களுக்காக டபுள் ட்ரீட் கொடுக்க ரெடியாகி விட்டாராம். தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் டிரைலருக்கு உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

மாஸ்டர் படத்தில் நடித்தவர்கள் ட்ரெய்லர் பார்த்த அனுபவத்தை பகிர்ந்து ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளனர். இந்நிலையில் ஜூன் 21-ஆம் தேதி  மாலை 5 மணிக்கு மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் என செய்திகள் கிடைத்துள்ளது.

அதேபோல் தளபதி விஜய்யின் 65ஆவது படத்திற்கான தளபதி65 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜூன் 22-ஆம் தேதி  மாலை 6 மணிக்கு வெளியிட தயாராகி விட்டது. தளபதி65 படத்தில் பணியாற்ற போகும் இயக்குனர், நடிகர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்களாம்.

இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு தளபதி விஜய்யின் பிறந்த நாளன்று ஏகப்பட்ட சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு கொடுக்க உள்ளனர். மேலும் மாஸ்டர் பட ட்ரைலரில் மாஸ்டர் ரிலீஸ் தேதி இடம்பெறும் எனவும் செய்திகள் கிடைத்துள்ளது.

அதனால் இப்போதே தளபதி ரசிகர்கள் தங்களது கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர். ட்விட்டரில் தினமும் ஒரு ஹேஸ்டேக் உருவாக்கி டிரென்ட் செய்து வருகின்றனர். அனேகமாக மாஸ்டர் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் தெரிகிறது.

Thanks To: Cinemapettai

About Veetri Rajkumar

Check Also

விஜய் சேதுபதி… ஜோடியாகும் கத்ரினா கைஃப்?

விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by