Wednesday , August 12 2020
Breaking News
Home / இந்தியா / புதிய கட்டுபாடுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை தொடரும்..!

புதிய கட்டுபாடுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை தொடரும்..!

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதிக்குப் பிறகு திறக்க அனுமதி.

அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்த பிறகு பள்ளி – கல்லூரிகளைத் திறக்கலாம் – ஜூலை மாதம் இறுதி முடிவெடுக்கலாம்.

முதியோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.

கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.

அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.

திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.

பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது.

சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.

மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை

சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

1. கட்டுபாட்டு பகுதிகளில் ஜூன் 30வரை ஊரடங்கு தொடரும் .
2. கட்டுபாட்டு பகுதிக்கு வெளியே படிபடியாக தளர்வுகள் தரப்படும்
இன்றைய மத்திய அரசின் அறிவிப்பின் சாரம் இதுவே, ஆனால் இறுதி முடிவு மாநில அரசு கைகளில் தான் உள்ளது.

3.தனிநபர்கள் மாநிலங்களிடையே பயணிக்க E-Pass பெறாமலேயே பயணிக்கலாம்- உள்துறை அமைச்சகம்.

MyHoster

About Veetri Rajkumar

Check Also

இன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by