Wednesday , August 12 2020
Breaking News
Home / குறுகிய செய்திகள் / சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கும் வட மாநில புலம் பெயர் தொழிலாளர்களும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும்..!

சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கும் வட மாநில புலம் பெயர் தொழிலாளர்களும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும்..!

வட மாநிலங்களில் இப்போது அறுவடைக்காலம்..

ஊரடங்கால் பட்டினியில் சாவதை விட நடந்து சென்றாவது சொந்த ஊர் போய் சேர்ந்துவிட்டால் உணவுக்கு உத்திரவாதமுண்டு என்பதால் தான் வட மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதில் குறியாக உள்ளனர்.

ஆனால் இத் தொழிலாளர்கள் ஊருக்குச் சென்றுவிட்டால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதாலும் உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் என்பதாலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதை முதலாளிகள் விரும்பவில்லை.

முதலாளிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காகவே மோடி அரசு ரயில் விடாமல் புலம் பெயர் தொழிலாளர்கள் ஊருக்கு செல்வதை தடுத்தது.இதற்கெதிரான போராட்டமாகவே புலம் பெயர் தொழிலாளர்கள் குழந்தைகளுடன் நடந்தே சொந்த ஊர்களை நோக்கி பயணிக்கின்றனர். இப்பிரச்சனை மோடி அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக வேறு வழியின்றி புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான சிறப்பு ரயில்களை இயக்க மோடி அரசு முடிவு செய்தது.

பல நெருக்கடிகளை சந்தித்து உயிர் தப்பி சொந்த ஊருக்குச் செல்லும் புலம் பெயர் தொழிலாளர்கள் மீண்டும் ஏற்கனவே வேலைபார்த்த இடங்களுக்கு திரும்பி வருவது தற்போதைக்கு சாத்தியமில்லை.திரும்பி வரும் மனநிலையில் பெரும்பாலான தொழிலாளர்கள் இல்லை.ஆனால் இத்தொழிலாளர்கள் திரும்பி வராமல் பல தொழில் நிறுவனங்கள் லாபகரமாக இயங்குவது சாத்தியமில்லை என்பதே எதார்த்த நிலை..கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் ரத்தத்தைக் குடித்தே பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்கின்றன..

ஊரடங்குக்கு முன்பாகவோ அல்லது குறைந்தபட்சம் முதற்கட்ட ஊரடங்குக்கு பிறகாவது இத்தொழிலாளர்கள் பத்திரமாக தங்களுடைய ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தால் இத்தொழிலாளர்கள் திரும்பி வருவதில் பிரச்சனை இருந்திருக்காது.ஆனால் மோடி அரசு இத் தொழிலாளர்களை மிக இழிவாகவும் கொடூரமாகவும் நடத்தியது.இன்று வரை இந்நிலை தொடர்கிறது.

தங்களுக்கு ஏற்பட்ட மிக மோசமான பாதிப்புகளால் வெறுத்துப்போன வட மாநில புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊரில் கிடைப்பதைக் கொண்டு அங்கேயே வாழ்ந்து விடலாம் என்ற மனநிலையில் தான் ஊருக்கு செல்கின்றனர்.

இவர்களை சொந்த ஊரை விட்டு பிழைப்புத்தேடி மீண்டும் நாடு முழுவதும் துரத்துவதே கார்ப்பரேட் கொள்ளையர்களின் அரசான மோடி அரசின் முன் உள்ள மிகப்பெரும் சவால்.சொந்த ஊரில் உணவுக்கு வழியில்லை என்றால் பிழைப்புத்தேடி நாடு முழுவதும் நாடோடிகளாக சென்று குறைந்த கூலிக்கு வேலை செய்வதைத் தவிர இந்த அப்பாவி ஏழைகளுக்கு வேறு என்ன வழி இருக்கிறது?

இச்சூழ்நிலையில் தான் வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நடக்கிறது.அறுவடைக்கு காத்திருக்கும் உணவுப் பயிர்களை கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் தின்று அழிக்கின்றன.இதனால் வட மாநிலங்களில் உணவுப்பற்றாக்குறை ஏற்படும்.உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் மீண்டும் சொந்த ஊர்களை விட்டு வெளியேறி வேலைதேடி தொழில் வளர்ச்சி உள்ள வெளி மாநிலங்களுக்கு செல்லவேண்டிய நெருக்கடி புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்படும்..

கொரோனா போலவே வெட்டுக்கிளிகள் படையெடுப்பும் ஏழை எளிய மக்கள் மீதான உயிரி யுத்தமே..

-நந்தினி ஆனந்தன்..

MyHoster

About Veetri Rajkumar

Check Also

இன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by