Thursday , April 18 2024
Breaking News
Home / இளைஞர் கரம் / பணி முடிந்து நானே வருகிறேன்; கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர்’ – குவியும் பாராட்டுகள்
MyHoster

பணி முடிந்து நானே வருகிறேன்; கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர்’ – குவியும் பாராட்டுகள்

திருச்சி மாவட்டம்.மணப்பாறையில் இரண்டாம்நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறார் சையது அபுதாஹிர்.

ஊரடங்கு சமயத்தில் மணப்பாறையில் காமராஜர் சிலை செக்போஸ்ட் பணியில் சையது அபுதாஹிர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சாலையில் தன் கணவருடன் நடந்துவந்துள்ளார். இதைப் பார்த்த அபுதாஹிர் அந்தப் பெண்ணையும் அந்தப் பெண்ணிண் கணவரையும் அழைத்துப் பேசியுள்ளார்.

`என் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு என் மனைவியை அழைத்துச் சென்றேன். மருத்துவமனையில் தேவையான ரத்தம் இல்லை என்பதால் இன்று பிரசவம் பார்க்க முடியாது’ என மருத்துவர்கள் கூறிவிட்டனர் என்று கூறியிருக்கிறார் கர்ப்பிணிப் பெண்ணின் கணவர். இதைக் கேட்ட காவலர் சையது அபுதாஹிர், எனக்கும் “O+ வகை” ரத்தம்தான் என்று அவர்களிடம் நானே அறுவை சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகளை மருத்துவமனைக்குச் சென்று செய்யச் சொல்லுங்கள் நான் இன்றே ரத்தம் கொடுக்கத் தயாராக உள்ளேன் எனக் கூறியுள்ளார் . மாலை 6 மணிக்குப் பணி முடிந்த பின்னர் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று ரத்தமும் கொடுத்திருக்கிறார். பின்னர் சுலோச்சனாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பெண் குழந்தையும் பிறந்தது. இது மாதிரியான சமயங்களில் மனிதநேயத்தோடு இந்தப் பணியைச் செய்தது எனக்கு ஆத்மதிருப்தியை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார் இதை கேள்விப்பட்ட திருச்சி SP ஜியாவுல் ஹக் அவர்கள் அவரை அழைத்து பாராட்டி அத்தோடு ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கியுள்ளார் அதே போல DGP அவர்களும் அழைத்துப் பாராட்டி 10,000 ரூபாய் வழங்கியுள்ளார். . நான் ரத்தம் கொடுத்தது ஒரு மனிதநேயப் பணி. அதற்கு என்னுடைய மேல் அதிகாரிகள் என்னைப் பாராட்டி இந்தத் தொகையை வழங்கியது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் இந்த மனிதநேய பணியைச் செய்ததற்காக இந்தத் தொகையை நான் வைத்திருப்பது ரத்தம் கொடுத்தற்காகப் பணம் பெற்றுக்கொண்டதைப் போல தோற்றத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதால் இந்தத் தொகையை அந்தப் பிறந்த குழந்தையின் கைகளிலே கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் இந்த காவலர் சையது அபுதாஹிர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பாக பாரதிய ஜனதா கட்சியின் மீது புகார் மனு…

கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பாகவும், கரூர் மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் கரூர் மாவட்ட …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES