Sunday , September 27 2020
Breaking News
Home / சினிமா / சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா…

சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா…

திரிஷா – சிரஞ்சீவி
தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தை தொடர்ந்து ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 152-வது படமாகும்.
இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருவதாக தகவல் வெளியானது. படக்குழுவினர் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக திரிஷா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
திரிஷா - சிரஞ்சீவி
சில சமயங்களில் ஆரம்பத்தில் சொன்ன, கலந்துரையாடிய வி‌ஷயங்கள் நடக்கும்போது வித்தியாசமாக மாறும். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சிரஞ்சீவியின் திரைப்படத்திலிருந்து நான் விலகிவிட்டேன். படக்குழுவுக்கு வாழ்த்துகள். என் அன்பார்ந்த தெலுங்கு ரசிகர்களே, மீண்டும் உங்களை ஒரு நல்ல படத்தின் மூலம் சந்திப்பேன் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
MyHoster

About Loganathan K

Check Also

கொண்டாட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்.

வருகிற 22ந் தேதி விஜய்க்கு பிறந்த நாள் வருகிறது. வழக்கமாக இந்த நாளில் விஜய் ரசிகர்கள் அவரவர் பகுதியில் ஏழை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by