Thursday , October 1 2020
Breaking News
Home / இந்தியா / ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கோரோன வைரஸ் பற்றி விழிப்புணர்வு முகாம்…

ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கோரோன வைரஸ் பற்றி விழிப்புணர்வு முகாம்…

சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார துணை இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சங்ககிரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் குமார் தலைமையில் கொரோன வைரஸ் விழிப்புணர்வு முகாம் இன்று ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.
இதில் corona வைரஸ் பரவும் விதம் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு எடுத்து வைக்கப்பட்டது.
மேலும் கை கழுவும் முறை அதனால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை சுகாதார ஆய்வாளர்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் குமார் அவர்களுக்கும் வட்டார சுகாதார துறை மேற்பார்வையாளர் பஞ்சட்சரம் அவர்களுக்கும், சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, கார்த்திக் குமார், வெங்கடாசலம் அவர்களுக்கும் ஸ்ரீ  சத்யம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனர் முனைவர் சுஜாதா அவர்கள் விழிப்புணர்வு முகாம்் நடத்திய குழுவினருக்கு  நன்றியை தெரிவித்தார்.

MyHoster

About Loganathan K

Check Also

கொரோனா பலி எண்ணிக்கை 90,000-ஐ கடந்தது!

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரக் குறிப்பின்படி, கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 83,347 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by