Wednesday , August 5 2020
Breaking News
Home / நிகழ்வுகள் / அவினாசி விபத்து : பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ள அவசர உதவி எண் – மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் டுவிட்டரில் பதிவு

அவினாசி விபத்து : பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ள அவசர உதவி எண் – மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் டுவிட்டரில் பதிவு

அவினாசி விபத்து குறித்து பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ளவதற்காக 7708331194 என்ற அவசர உதவி எண்ணை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

திருப்பூர்,
பெங்களூருவில் இருந்து கொச்சின் நோக்கி கேரள அரசுக்கு சொந்தமான சொகுசு பேருந்து 48 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, டைல்ஸ் ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் லாரியுடன் மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் உயிரிழந்தனர்.  விபத்தில் பலியானவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிக்க பாலக்காடு மாவட்ட ஆட்சியரை நிகழ்விடத்திற்கு செல்லுமாறு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.  தமிழக அரசுடன் இணைந்து சாத்தியமான அனைத்து நிவாரண நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,  இந்த விபத்து குறித்து பயணிகளின் உறவினர்கள் தொடர்புகொள்ளவதற்காக 7708331194 என்ற அவசர உதவி எண்ணை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
MyHoster

About Loganathan K

Check Also

சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கும் வட மாநில புலம் பெயர் தொழிலாளர்களும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும்..!

வட மாநிலங்களில் இப்போது அறுவடைக்காலம்.. ஊரடங்கால் பட்டினியில் சாவதை விட நடந்து சென்றாவது சொந்த ஊர் போய் சேர்ந்துவிட்டால் உணவுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by