Sunday , September 20 2020
Breaking News
Home / விளையாட்டு / அமெரிக்க கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபி பிரயண்ட்: ஹெலிகாப்டர் விபத்தில் பலி

அமெரிக்க கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபி பிரயண்ட்: ஹெலிகாப்டர் விபத்தில் பலி

பிரபல அமெரிக்க கூடைப்பந்து விளையாட்டு வீரரான கோபி பிரயண்ட் தனது மகள் ஜனாவுடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிக் கோபி பிரயண்ட் மற்றும் அவரது மகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

41 வயதான பிரயண்ட், கலிஃபோர்னியாவில் ஒரு தனியார் ஹெலிகாப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என லாஸ் ஏன்ஜல்ஸ் நகரின் ஷெரிஃப் கூறினார்.

தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பிரயண்ட் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். கூடைப்பந்து விளையாட்டு வரலாற்றில் பிரயண்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்.

பிரயண்ட் உயிரிழப்புக்குப் பல விளையாட்டு வீரர்களும் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அமெரிக்காவில் நடந்த கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளின்போது சில நிமிடங்கள் மவுன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

லாஸ் ஏன்ஜன்ஸ் நகரில் நடந்த கிராமி விருதுகள் நிகழ்விலும் பிரயண்டிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேசிய கூடைப்பந்து சங்கம் வெளியிட்டுள்ள, அறிக்கையில் ”13 வயதான ஜனா மற்றும் கோபி பிரயண்டின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்து உள்ளது. இது பேரிழப்பு” என்று குறிப்பிட்டிருந்தனர்.

எப்படி விபத்து ஏற்பட்டது ?

ஹெலிகாப்டரில் பயணித்த ஒன்பது பேரும் உயிரிழந்ததை லாஸ் ஏன்ஜல்ஸ் நகரின் ஷெரிஃப் உறுதிப்படுத்தினார். இந்த விபத்து ஏற்பட்ட இடத்தில் வசித்த மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறினார்.

MyHoster

About Loganathan K

Check Also

முன்னணி கூடைப்பந்து, கால்பந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு…

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி கூடைப்பந்து வீரர் கெவின் டுரன்ட், பிரான்ஸ் கால்பந்து வீரர் பிளேஸ் மாட்டுடி ஆகியோர் கொரோனா வைரஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by