Tuesday , September 22 2020
Breaking News
Home / ஆன்மீகம் / திருக்குறள்

திருக்குறள்

திருக்குறள்

(அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:619)

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

பொழிப்பு (மு வரதராசன்): ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும். மணக்குடவர் உரை: புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும்.
இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.

பரிமேலழகர் உரை: தெய்வத்தான் ஆகாது எனினும் – முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் – முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலிஅளவு தரும்; பாழாகாது.
(தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும் என்பது உம்மையால் பெற்றாம். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.)

இரா சாரங்கபாணி உரை: ஊழால் கருதிய பயன் கைகூடாதாயினும், முயற்சி தன் உடலுழைப்புக்கேற்ற பயனை எப்பொழுதும் தரும். (ஊழ் துணையாய வழி பயன்மிகும் என்பது கருத்து.)

MyHoster

About Veetri Rajkumar

Check Also

இன்று மட்டும் 6,785 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by