Thursday , October 1 2020
Breaking News
Home / ஆன்மீகம் / இன்று வள்ளலார் 196 வது பிறந்தநாள்

இன்று வள்ளலார் 196 வது பிறந்தநாள்

இன்று வள்ளலார் 196 வது பிறந்தநாள்

பிறந்த தேதி : 05 அக்டோபர் 1823

நாம் இன்று பொதுவாக நமக்கு முன்னர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தாக நம்பிக்கொண்டிருக்கும் பல சித்தர்களையும் வெளிநாடுகளில் வாழ்ந்து நம் வாழ்வியலுக்கு நல்வழி வகுத்தவர்களையும் பற்றி நன்கு அறிந்துவைத்துள்ளோம் அத்தோடு இல்லாமல் அவர்கள் கூறியபடி நாம் வாழ்வியலையும் கடைபிடிக்கவும் செய்கிறோம்

 

இதில் உண்மை என்னவென்றால் அது எந்தளவுக்கு உண்மை தன்மை கொண்டது என்பது யாராலும் அறுதியிட்டு கூறியலாதவைகளே பல புனைக்கப்பட்டதாகவும் கூட இருக்கலாம்

ஆனால் நமது காலத்திற்கு வெகு அருகாமையில் நம்மோடு அதாவது கடந்த நூற்றாண்டில் மக்களோடு மக்களாக இணைத்து மக்கள் அனைவரும் சமம் இதில் சாதி மதம் இனம் என எந்த ஏற்றதாழ்வுகளும் கிடையாது என்கின்ற ஒரு உண்ணத வாழ்வியலை உருவாக்கிய மகான்தான் வடலூர் இரமலிங்கடிகளார் என்கின்ற வல்லார்

வல்லல் பெருமானின் ஜீவகருண்யம் ஒவ்வொரு மனிதருமே நாம் வாழும் காலத்தில் கடவுளாக மாற்றக் கூடிய மிக எளிய வழிமுறை

இதனையே வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என குறிப்பிடும் வார்தைகளில் இருந்து நாம் உணர்ந்துக்கொள்ள முடியும்

ஞானம் பற்றிய இவரது விளக்கம் நம்மை இன்னும் மெய்சிலிக்க வைக்கும் பொதுவாக நமது முன்னோர்கள் ஞானத்திற்கான தடையாக இருப்பது என குறிப்பிடுவது ஐம்புலன்கள் இதில் கண்களும் அடங்கும் இரு அகக்கண்களை கடந்தே புறக்கண் மூலம் ஞானம் சாத்தியமாகும் என்பதே

ஆனால் வல்லல் பெருமான் நமக்கு மொத்தம் 25 கண்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார் அவை நமது நகங்கள் தொடங்கும் இடமான கை மற்றும் கால்களில் உள்ள நக்கணுக்கள் 20 இடங்களையும் கண்களாகவே குறிப்பிடுகிறார் ஏனென்றால் நம் கைகள் மற்றும் கால்கள் கொண்டும் இந்த புற உலகை நுகரமுடியும் என்பதால்

அத்தோடு நம் அகத்தில் இருக்கும் இரண்டு கண்களையும் புறத்தில் இருக்கும் சித்சபை மற்றும் பொற்சபை என்ற இரு கண்கண்களையும் கடந்தே ஞான சபை என கூறக்கூடிய ஞான ஜோதியை அடைய முடியும் என்பதே. இதில் மொத்தம் குறிப்பிடபடுபவைகள் 25 கண்கள் ஆகும்

இது போன்ற அற்புத தகவல்களை நமக்களித்த வல்லல் பெருமானின் பிறந்த்தினம் என்பதாலே அவர்பற்றிய ஒரு சிறு விழிப்புணர்வு ஏற்படவே எனதிந்த பதிவு

நாம் எத்தனையோ புத்தகங்களை படிக்கிறோம் ஆனால் சில புத்தகங்கள் மட்டுமே நம் வாழும் வாழ்க்கையில் பயன்படுத்திக்கொள்ள முடியும் அப்படி ஒரு புத்தகம் உண்டென்றால் அதில் வல்லல் பெருமானின் திருவாட்பா முதன்மை இடத்தை பிடிக்கும் என்றே தோன்றுகிறது

உங்களுக்கு வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் வாசிக்க வேண்டும் தோன்றினால் வாசியுங்கள் ஆனால் வாழ்நாளின் இறுதிகட்டத்தில் வாசிக்க வாய்புகிடைத்தால் நாம் வாழ்க்கையில் எத்தனை அற்புதமான விஷயங்களை இத்தனை காலம் கடந்து வாசித்தோம் என்ற தீராத ஏக்கத்துடனே நமது ஆயுள் முடிவுறும் என்பதுதான் எதார்தமாக இருக்கும்

அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும் ஜோதி

MyHoster

About Gopi Balaraman

Check Also

புதுடில்லி : அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, பிரதமரால் அறிவிக்கப்பட்டஅறக்கட்டளையின் முதல் ஆலோசனைக் கூட்டம், டில்லியில் இன்று நடக்கவுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி நகரில், ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளைமேற்கொள்ள மத்திய அரசு அறக்கட்டளை அமைத்துள்ளது. ‘ராம ஜென்ம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by