கரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சார்பாக சிறப்பு ஏழு நாள் முகாமின் கடைசி நாளான 30.09.2019 திங்கள் காலை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. இதில் கரூர் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் ஹெல்த் சயின்ஸ் இல் 30 மாணவிகளும் , அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் 25 பேரும் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இப்பேரணி அரசு மகளிர் பள்ளியில் துவங்கி ஜவகர் பஜார் வழியாக சென்று எ.ஆர்.எஸ் கல்லூரியில் முடிவடைகிறது. எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் தாளாளர் திருமதி. ரீகானா பேகம் அவர்களும் , இதில் திட்ட அலுவலர் திருமதி. உமா மகேஸ்வரி அவர்களும் முன்னிலை வகித்தது நடத்துகின்றனர். இதன் நிறைவு விழா ஜெயப்பிரகாஷ் பள்ளியில் நடைபெற உள்ளது.
