Wednesday , August 5 2020
Breaking News
Home / ஆன்மீகம் (page 3)

ஆன்மீகம்

ஆன்மீகம்

திருக்குறள்

கரூர் 18 அக்டோபர் 2019 அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல. மு.வ உரை: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை. சாலமன் பாப்பையா உரை: அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா. கலைஞர் உரை: தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு …

Read More »

திருக்குறள்

கரூர் 17 அக்டோபர் 2019 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி. மு.வ உரை: உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர். சாலமன் பாப்பையா உரை: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர். கலைஞர் உரை: உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல …

Read More »

திருக்குறள்

கரூர் 16 அக்டோபர் 2019 வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. மணக்குடவர் உரை: வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை; அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா. மற்றவையென்றது கருவியும் உபாயமும். பரிமேலழகர் உரை: வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் – வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற – அஃது ஒழிந்தன …

Read More »

திருக்குறள்

கரூர் 15 அக்டோபர் 2019 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. மு.வரதராசன் விளக்கம்: இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும். சாலமன் பாப்பையா விளக்கம்: இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும். சிவயோகி சிவக்குமார் …

Read More »

அன்னதானம் வழங்கிய சாதனை இளைஞர் நற்பணி மன்றம்

கரூர் 12 அக்டோபர் 2019 கரூர் மாவட்டம், கரூர் வட்டம், தான்தோன்றிமலையில் வீற்றிருக்கும் அருள்மிகு கல்யாண வெங்கட்ராமன் சுவாமிகள் கோவில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் புரட்டாசி தேர்த்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் நேற்றிக்கடன்கள்,அன்னதானம் வழங்கி பெருமாளை தரிசிப்பது வழக்கம்.மாதம் முழுவதும் விசேஷ பூஜைகள் நடந்தாலும், பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமை வெகு சிறப்பாக மக்கள் குடி சுவாமி தரிசனம் பெறுவது வழக்கம். கரூர் மாவட்டம்,கரூர் வட்டம் …

Read More »

திருக்குறள்

கரூர் 12 அக்டோபர் 2019 தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு மு.வ உரை: மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும். சாலமன் பாப்பையா உரை: மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

Read More »

திருக்குறள்

திருக்குறள் (அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:619) தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் பொழிப்பு (மு வரதராசன்): ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும். மணக்குடவர் உரை: புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும். இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது. பரிமேலழகர் உரை: தெய்வத்தான் ஆகாது எனினும் – …

Read More »

தீபாவளி – பள்ளிகளுக்கு மூன்று நாள் விடுமுறை

தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 26ஆம் தேதி சனிக்கிழமை 4வது வாரம் என்பதால் அன்று வழக்கம் போல் பள்ளி அலுவல் நாளாக இருக்கும். அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கு பயனளிக்கும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 26ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவித்து …

Read More »

அம்மா…சேலை….திரை

அம்மா… நான் பிறந்து விழுந்த போது… உன் சேலைதான் ஈரமானது…!!! நான் உறங்க… உன் சேலைதான் ஊஞ்சல் ஆனது..!!! . நான் பால் அருந்தும் போது… உதட்டினை துடைத்து உன் சேலை தான்…!!! எனக்கு பால் கொடுக்கும்போது… உன் சேலை தான் எனக்கு திரையானது…!!! நான் மழையில் நனையாமல் இருக்க… உன் சேலை தான் குடையானது…!!! நீச்சல் பழக… என் இடுப்பில் கட்டியதும் உன் சேலை தான்…!!!! மழையில் நனைந்த …

Read More »

ஆதி கோரக்கநாதா் மெளனகுரு சித்தா் ஸ்ரீலஸ்ரீ பத்தமகிரிபாபா

ஹாி ஓம்… சிவ ஓம்… ஆதி கோரக்கநாதா் மெளனகுரு சித்தா் ஸ்ரீலஸ்ரீ பத்தமகிரிபாபா அவா்களது கருமலை சமஸ்தானத்தில், வருகின்ற ஞாயிற்றுகிழமை (13-10-2019) அன்று பெளா்னமி சிறப்பு வேள்வியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற இருக்கிறது. அனைவரும் தவறாது கலந்து கொண்டு எங்கள் ஜலஅரசனின் அருள் பெற்று செல்லுமாறு கேட்டு கொள்கிறோம். ஹாி ஓம்… சிவ ஓம்…

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by