Sunday , July 5 2020
Breaking News
Home / தமிழகம் (page 3)

தமிழகம்

தமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக 2500ஐ தாண்டிய பாதிப்பு..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 39ஆக உள்ளது. தமிழகத்தில், 3வது நாளாக தினசரி பாதிப்பு 2,500ஐ கடந்துள்ளது. மேலும், தமிழகத்தின், மொத்த கொரோனா பாதிப்பு 64,603 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் மேலும் 1380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பரிசோதனை அளவு என்பது குறைவுதான். 23,921 பேருக்கு பரிசோதனை செய்யப்பபட்டுள்ளது. இன்றைய தினம் …

Read More »

போலீஸ் தாக்கியதில் தந்தை – மகன் சாவு? பொதுமக்கள் போராட்டம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அதிகாரிகளின் கொலை வெறியாட்டம்! பெண்ணி இம்மானுவேல் நாடார் அவர்களை சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் மொபைல் கடை மூலம் தொழில் செய்து வரும் இளைஞர் இரண்டு தினத்திற்கு முன் காவல்துறை அதிகாரியின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு தந்தையும் மகனும் ஆளானார்கள். மலத்துவாரத்தில் கம்பைக் கொண்டு தாக்கியதால் இரத்தப்போக்கு நிற்காமல் முதலுதவி உதவியுடன் மற்றும் இவர்கள் இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்கள். இப்போது பெண்ணி இம்மானுவேல் நாடார் …

Read More »

கரூர் நகராட்சி பகுதி பொதுமக்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ….

அதிகாலையில் கரூர் நகராட்சி பகுதி பொதுமக்களை சந்தித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சாக்கடை வடிகால், சாலை வசதி, குடீநீர் பிரச்சினைகள் குறித்து வீதி வீதியாக சென்று நேரில் ஆய்வு இன்று காலை 6:30 மணிக்கு கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் கரூர் மாவட்டக் கழக ஆற்றல்மிகு செயலாளர் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் ஒவ்வொரு வார்டாக வீதி வீதியாகசென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அப்பகுதியில் சாக்கடை வசதிகள், …

Read More »

கொரோனாவால் உயிரிழப்பு;சென்னையிலிருந்து கரூர் திரும்பிய நபர்!!

சென்னையிலிருந்து கரூர் திரும்பிய ஹோட்டல் தொழிலாளி கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கரூர் வெங்கமேடு விவிஜி நகரைச் சேர்ந்த 40 வயது நபர் ஹோட்டல் தொழிலாளியாகப் பணிபுரிந்தார். இவர் சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலில் கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். ஊரடங்கு காரணமாக தனி காரில் மனைவி மற்றும் மகளை கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு இவர் தனி காரில் நேற்று முன்தினம் …

Read More »

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் முக்கிய அறிவிப்பு….

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வணிக நிறுவனங்கள், மளிகைக்கடைகள், வியாபாரத்தளங்கள் உள்ளிட்டவைகள் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே செயல்படும் – கொரேனா தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன்.இஆப., அவர்கள் அறிவிப்பு அதன் விபரம் வருமாறு: கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் அறிவுரையின்படி கொரோனா தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்துவகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றது. கொரோனா …

Read More »

தமிழகத்தில் இன்று 2396 பேருக்கு கொரோனா…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 2396 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதிப்பு 56845 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் தினமும் 2000+ கேஸ்கள் தமிழகத்தில் வர தொடங்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்றுதான் தமிழகத்தில் அதிகமாக கேஸ்கள் வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து …

Read More »

“இறைவனுக்குத்தான் தெரியும்..” மேலே கை காட்டிய முதல்வர்…

சென்னை: கொரோனா எப்போது கட்டுக்குள் வரும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சென்னை வேளச்சேரியில் 350 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். இதற்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்காத சூழ்நிலையிலும், மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதார அமைச்சகம் …

Read More »

ஒரே நாளில் தமிழகத்தில் 2,174 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் மொத்தம் 48 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 2,174 பேருக்கு கொரோனா உறுதியானது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக 2,000க்கும் அதிகமானோருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.576 பேர் பலிஇதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை …

Read More »

₹ 50 ஆயிரம் அபராதம் விதித்த உயர் நீதிமன்றம்-ஊரடங்கை ரத்து செய்ய கோரிய வழக்கு..

தமிழகத்தில் தொடரும் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். இது தொடர்பாக சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தமிழக முற்போக்கு மக்கள் கட்சியை சேர்ந்த இம்மானுவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு இம்மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பலர் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக …

Read More »

கொரோனாவால் பலி!முதலமைச்சர் அலுவலக தனிச் செயலாளர்.

முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்பு முன்பைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவதுடன் உயிரிழக்கும் சூழலும் உருவாகும் எனக் கூறப்பட்டாலும் சமீப நாள்களாக வரும் செய்திகள் அதற்கு நேர்மாறாக அமைந்துள்ளன சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இள வயதினரும், நடுத்தர வயதினரும் தான். அதுபோல் உயிரிழந்தவர்கள் பட்டியலிலும் வயது குறைவானவர்களின் …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by