Sunday , April 11 2021
Breaking News
Home / உலகம் (page 4)

உலகம்

உலகம்

டிரம்புக்கு எதிராக திரும்பிய.. காலின் பாவெல்..

நியூயார்க்: ஏகப்பட்ட கனவில் மூழ்கி திளைத்து வந்தார் அதிபர் டிரம்பின்.. அந்த அத்தனை ஆசைகளிலும் மண் விழுந்து வருகிறது.. வரக்கூடிய அதிபர் தேர்தலில் டிரம்புக்கு வாக்களிக்க போவதில்லை என குடியரசு கட்சியைச் சேர்ந்த காலின் பாவெல் அறிவித்துள்ளார். இதனால் டிரம்புக்கு டென்ஷன் எகிறி உள்ளது! அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.. இதற்குதான் பல வகைகளில் தன்னை தயார் படுத்தி வந்தார் டிரம்ப்.. திரும்பவும் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கனவில் இருந்து வருகிறார்.

இந்த சமயத்தில்தான் கொரோனா நுழைந்தது.. ஆரம்பத்தில் அந்த வைரஸை கண்டுகொள்ளவே இல்லை.. கொரோனாவைரஸை தடுக்க இவர் சரிாயான நடவடிக்கை எடுக்கவில்லை. அலட்சியம் காட்டினார். இதனால் அமெரிக்காவில் மிகப் பெரிய உயிரிழப்பு ஏற்பட்டது. மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். கொத்து கொத்தாக பலர் மடிவதை பார்த்தபோதுதான் அதிபருக்கு நாளடைவில்தான் லேசாக அடிவயிற்றில் பீதி கிளம்பியது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த தேர்தல் நடைபெறுமா என்பதில் சந்தேகமாக இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என்று டிரம்ப் பிடிவாதமாக சொல்லிவிட்டார். எத்தனை பேர் இறந்தாலும், பொருளாதாரம் அதல பாதாளத்தில் தொங்கினாலும், தான்தான் அடுத்த அதிபர் என்பதில் படு உறுதியாக இருக்கிறார். வைரஸ் பரவல் இன்னும் அதிகமாகும் என்று எச்சரிக்கப்பட்டும்கூட, லாக்டவுனை தளர்த்துவதிலேயே அவர் குறியாக இருந்து வருகிறார். இந்த சமயத்தில்தான், கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொலை விவகாரம் வெடித்தது.. ஒரு கொலை, உள்நாட்டு போராக வெடிக்கும் என்பது மட்டுமல்ல, உலகம் தழுவிய நிறவெறி, இனவெறிக்கு எதிராக இப்படி திரண்டு வந்து நிற்கும் என்று அதிபர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. புரட்சிகளும், போராட்டங்களும் வெடிப்பதை பார்த்து மலங்க மலங்க விழித்து கொண்டிருக்கிறார்.

என்னென்னவோ மிரட்டல் விடுத்து பார்க்கிறார்.. சொந்த நாட்டில் ஒருத்தரும் இவர் பேச்சை கேட்கவில்லை.. கொரோனா உயிரிழப்பு & ஜார்ஜ் கொலை இரண்டுமே டிரம்ப்பின் அதிபர் கனவை நொறுக்கி கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் எல்லாம் அதிபருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், இப்போது இன்னொரு ஷாக் டிரம்புக்கு தரப்பட்டுள்ளது.. அந்த ஷாக் முக்கியமான கட்சியில் இருந்தே டிரம்புக்கு வந்ததுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

குடியரசு கட்சியைச் சேர்ந்த காலின் பாவெல் சிஎன்என் மீடியாவுக்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், “போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை அழைப்பேன் என்று சொல்லி இருக்க கூடாது.. அது தவறானதும்கூட.. இந்த நாட்டில் ஒரு அரசியலமைப்பு இருக்கிறது… அந்த அரசியலமைப்பை அனைவரும் பின்பற்ற வேண்டியது நம் கடமை.. ஆனால் அதிபர் மட்டும் அதிலிருந்து வேறு பாதைக்கு செல்கிறார்.. திசை மாறி போகிறார்.. அவரது பேச்சு, அமெரிக்க ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த வருஷம் நடக்க போகும் அதிபர் தேர்தலில் நான் டிரம்பை ஆதரிக்க முடியாது.. கண்டிப்பாக முடியாது.. நான் சமூகம் தொடர்பான விஷயத்திலும், அரசியல் தொடர்பான விஷயத்திலும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனுடன் இணக்கமாக இருக்கிறேன்.. எங்கள் நெருக்கம் அதிகமாக இருக்கிறது.. காரணம், நானும் அவரும் 35-40 வருஷமாக ஒன்றாக பணிபுரிந்து வருகிறோம்… வரப்போகும் தேர்தலில் அவர் அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட போகிறார்.. அதனால் நான் அவருக்குதான் வாக்களிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். காலின் பாவெல் முன்னாள் உள்துறை அமைச்சரும் கூட. 83 வயதாகிறது.. அமெரிக்க ராணுவத்தில் முன்னணி பொறுப்பிலிருந்தார்.. அதற்கு பிறகுதான் குடியரசு கட்சியில் இணைந்தார்.. சென்ற முறையே அதாவது 2016-ம் ஆண்டுகூட அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு இவர் வாக்களிக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

ஆக மொத்தம் பார்த்தால் டிரம்புக்கு அவரை சுற்றிலுமே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.. அவரது 2வது மனைவி, மகளே எதிர்ப்பு காட்டுகிறார்கள்.. போலீஸ் கமிஷனரே டிரம்பை “வாயை மூடுங்கள்” என்று எச்சரிக்கிறார்.. நம்பிக்கைக்குரிய பாவெல்லும் ஓட்டு போட மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.. அதிபருக்கு எதிரி வெளியாட்கள் இல்லை.. தன்னை சுற்றிலும் உள்ளவர்களே.. இதெல்லாம் பார்த்தால் டிரம்பின் கனவு தகர்ந்து வருவதுபோலவே கண்ணுக்கு தெரிகிறது. மொத்தத்தில் டிரம்ப் வாய்க்கு.. வாஸ்து இப்போ சரியாக இல்லை..!

Thanks To: One india tamil

கொரோனா வைரஸ் தொற்று பரவலில் நடந்தது என்ன?-சீனா விளக்கம்

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை சீனா வெளியிட்டு, தன் பக்கம் எந்த தவறும் இல்லை என்று காட்டிக்கொள்ள முயற்சித்து இருக்கிறது.

ஆயிற்று, 6 மாதங்கள்!

சீனா இப்போதுதான் கண் விழித்திருக்கிறது. பின்னே?

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதன் முதலாக வுகான் நகரில் தென்பட்டதாகத்தான் தகவல்கள் இதுவரை வெளிவந்தன.

இப்போது 6 மாத காலத்தில் அந்த கொலைகார வைரஸ் தொற்று, பூமிப்பந்து முழுக்க கிட்டத்தட்ட ஆக்கிரமித்து விட்டது. 69 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று உலகமெங்கும் ஏற்பட்டிருக்கிறது. மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், 4 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள்.

பிற எந்த நாட்டையும் விட வல்லரசு நாடான அமெரிக்காவை இந்த வைரஸ் பாடாய்படுத்தி இருக்கிறது. 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு அங்கே இந்த தொற்று பாதித்து இருக்கிறது. ஏறத்தாழ 1 லட்சத்து 10 ஆயிரம் உயிர்களை அங்கு கொரோனா பலி வாங்கி இருக்கிறது. இந்தியாவிலும் கூட இந்த நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 2½ லட்சத்தை எட்டுகிறது. உயிர்ப்பலியும் 7 ஆயிரத்தை நெருங்குகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பற்றி உண்மை தகவல்களை சீனா உடனே வெளியிடாமல் மூடி மறைத்ததால்தான் உலக நாடுகள் எல்லாம் கொடிய விலை கொடுத்து கொண்டிருக்கின்றன என்று அமெரிக்கா இன்றளவும் குற்றம் சுமத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை சீனா தனது நாட்டுக்குள் கட்டுப்படுத்தி இருக்க முடியும், ஆனால் அதை அந்த நாடு செய்யவில்லை என்பதுதான் அமெரிக்காவுக்கு அந்த நாட்டின் மீது தீராக்கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அது மட்டுமல்ல, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமெரிக்கா தொடங்கி அத்தனை நாடுகளும் நீண்டதொரு பொது முடக்கத்தை அமல்படுத்தியதால் கோடிக்கணக்கானோருக்கு வேலை இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. உலக நாடுகளின் பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து விட்டது. அடுத்து நடக்கப்போவது என்ன என்று கணிக்க முடியாத நிலையில் நாடுகள் அனைத்தும் கதி கலங்கிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கி 6 மாதங்கள் ஓடிவிட்டன. இப்போதுதான் சீனா தனது நீண்ட மவுனத்தை கலைத்துக்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை அந்த நாடு வெளியிட்டு, தன் பக்கம் எந்த தவறும் இல்லை என்று காட்டிக்கொள்ள முயற்சித்து இருக்கிறது. அது நீண்டதொரு விளக்கமாக அமைந்து இருக்கிறது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்த்தோமானால்-

  • கொரோனா வைரஸ் முதன்முதலாக வுகானில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கண்டறியப்பட்ட நாள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி ஆகும்.
  • நோயாளிகளின் உடல் நிலை மற்றும் மருத்துவ விளைவுகளை பகுப்பாய்வு செய்து, அந்த கண்டுபிடிப்புகள் பற்றி ஆராய்வதற்கு உள்ளூர் அரசால் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தொற்றுநோயியல் நிபுணர்கள், இது வைரஸ் நிமோனியா என கூறினர்.
  • தேசிய சுகாதார கமிஷன் ஏற்பாடு செய்த உயர் மட்ட அளவிலான நிபுணர்கள், இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒன்று என்பதை முதன் முதலாக ஜனவரி 19-ந் தேதி உறுதி செய்தனர். இந்த நாளுக்கு முன்பாக இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சீன முன்னணி சுவாச நிபுணர் வாங் குவாங்பா தெரிவித்தார்.

ஜனவரி மாத தொடக்கத்தில் தேசிய சுகாதார கமிஷனால் வுகானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிபுணர்களில் வாங் குவாங்பா ஒருவர். வுகானுக்கு நிபுணர்கள் சென்றிறங்கிய போது காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. மேலும் வைரஸ் முதன் முதலாக வெளிப்பட்டதாக கூறப்படக்கூடிய வுகான் விலங்குகள் சந்தைக்கும், இவர்களுக்கும் நேரடி வெளிப்பாடு இல்லை என கண்டறிந்தனர். மேலும் வவ்வால்கள் மற்றும் எறும்புதின்னிகள் வைரசின் பரிமாற்ற ஆதாரங்களாக இருக்கலாம் என சந்தேகித்தனர். ஆனால் அதற்கும் போதுமான ஆதாரம் இல்லை என்பது வாங் குவாங்பா கருத்து. அதன்பிறகு, இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து சக மனிதர்களுக்கு பரவுமா என்பதை அறிவிக்க அறிவியலாளர்களுக்கு விடப்பட்டது. ஏனெனில் இதில் ஒரு தவறு நேர்ந்தால் அது கற்பனை செய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

இந்த நிலையில் ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு எடுக்கும் அமைப்பான உலக சுகாதார சபையானது, கொரோனா வைரஸ் தோற்றம் தொடர்பாக விசாரணை நடத்துவது தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு சீனாவும் ஆதரவு அளித்தது.

  • ஜனவரி 14-ந் தேதி, வுகான் மற்றும் அந்த நகரம் அடங்கிய ஹூபெய் மாகாணமும் வைரசை சந்திக்க ஆயத்தமாக இருப்பதை அதிகரிக்க வேண்டும் என்று தேசிய சுகாதார கமிஷன் அறிவுறுத்தியது. ஏனென்றால், அப்போது பெரிய அளவில் நிச்சயமற்ற நிலைகள் இருந்தன. மேலும் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுவதற்கான திறனும், வழிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியது.
  • சீனாவின் முன்னணி சுவாச நோய் நிபுணரான ஜாங் நன்ஷான், கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என்று ஜனவரி 20-ந் தேதி உறுதி செய்தார். அந்த நேரத்தில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 2 கேஸ்கள் இதை உறுதி செய்தன.

சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் காவ் பூ, ஏப்ரல் மாதம் சிஜிடிஎன் டி.வி.க்கு அளித்த பேட்டியில், ஜனவரி 19-ந் தேதி நடந்த ஒரு கூட்டத்தில் நிபுணர்கள் இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதித்தனர். உகானில் பாதிப்பு அடையாளம் காணப்பட்ட உடன் சீனா பரவலை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

  • சரியான நேரத்தில் சீனா, உலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும், வைரஸ் பரவும் நிலவரம் குறித்து தெரியப்படுத்தப்பட்டது. வைரசின் மரபணு வரிசையும் வெளியிடப்பட்டது.
  • வுகானில் சமூக பரவல் மற்றும் கொத்து கொத்தாக பாதிப்பு வந்த பின்னர் சீனாவின் பிற பிராந்தியங்களிலும் வைரஸ் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டது. வுகானில் இருந்து அங்கு சென்றவர்களால்தான் இந்த வைரஸ் பரவியது. அதைத் தொடர்ந்து நாடளாவிய தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்டம் தொடங்கப்பட்டது.
  • இந்த வைரஸ் அறியப்படாத நிமோனியா என அடையாளம் காணப்பட்ட பின்னர் ஜனவரி 3-ந்தேதி முதல் சீனாவின் சுகாதார அமைப்புகள் ஒரு நாள் கழித்து, உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்காவுக்கு மேலதிக விவரங்களை தெரிவிக்க தொடங்கின.

சர்வதேச சமூகம், இந்த வைரசுக்கு எதிராக ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஒற்றுமை என்றால் வலிமை. இந்த போரில் உலகம் வெல்லும்.

இவ்வாறு வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது உலக சுகாதார நிறுவனம், பொதுவெளியில் புகழ்ந்துரைத்தாலும்கூட, உரிய நேரத்தில் சீனா தகவல்கள் தராததால் உலக சுகாதார நிறுவனம் ஏமாற்றம் அடைந்து விரக்தியை சந்தித்தது என்று சமீபத்தில் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில்தான் சீனா இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதை உலக நாடுகள் ஏற்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Thanks To: Malaimalar

டாடா ஸ்கையின் “பகீர்” அறிவிப்பு!ஜூன் 15-க்கு பின் சில சேனல்கள் நீக்கப்படும்

சுமார் 70 லட்சம் பயனர்களுக்கான மாதாந்திர பில்களைக் குறைக்க டாடா ஸ்கை ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது!

வாடிக்கையாளர்களை மீண்டும் பெறுவதற்கான ஒரு நடவடிக்கையாக, டாடா ஸ்கை நிறுவனம் கிட்டத்தட்ட 70 லட்சம் (அதாவது 7 மில்லியன்) சந்தாதாரர்களுக்கான மாதாந்திர கட்டணங்களை குறைக்க அதன் சேவையில் இருந்து சில சேனல்களை நீக்க முடிவு செய்துள்ளது.

ஏனென்றால், இந்தியாவின் மிகவும் பிரபலமான டி.டி.எச் ஆபரேட்டர் ஆன டாடா ஸ்கை, கடந்த 60 நாட்களில் அதிக விலை காரணமாக 15 லட்சம் (அதாவது 1.5 மில்லியன்) சந்தாதாரர்களை இழந்துள்ளது.

Thanks To: Samayam News

கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு இன்று பிறந்தநாள்…

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே தனது 32ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

கிட்டத்தட்ட 9 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடும் அஜிங்கியா ரஹானே 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளில் ரஹானே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தற்போது வரை இவர் இந்திய அணிக்காக 65 டெஸ்ட் போட்டிகளிலும், 90 ஒருநாள் போட்டிகளிலும், 20 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். ஒருசில ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

உலக சுற்றுசூழல் தின நல்வாழ்த்துக்கள்…

நமது சுற்றுசூழலை பாதுகாப்பதே நாம் நம் உலகை காக்க நம் செய்யும் தலையாய கடமை ஆகும். நாம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது. மரம் வளர்த்து மழை பெறுவது. உயிர்வளியை காப்பது நமது கடமையாகும்.

இளைஞர்குரல் இணையவழி பத்திரிக்கையின் இனிய சுற்றுசூழல் தின நல்வாழ்த்துக்கள்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பாவா நகர் 1 ல் தார்ச்சாலை அமைக்கும் பணி…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பாவா நகரைச் சுற்றி வர தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த செயல் திறம்பட பாவா நகருக்கு கொண்டு வந்த பெருமை பாவா நகர் மக்களுக்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கும் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று பாவா நகருக்கு சாலை அமைக்கும் பணியை விரைவில் கொண்டு வந்தமைக்கு தமிழக அரசுக்கும் மற்றும் அரவக்குறிச்சி பஞ்சாயத்து அதிகாரிகளுக்கும் இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

உலகே பார்த்து பதறும் வீடியோ..! அமெரிக்காவில் வெடித்த போராட்டம்.

“நான் ஒரு சின்ன பெண்.. மைனர் பெண்.. அந்த சம்பவத்தை பார்த்ததும் பயந்துட்டேன்.. என்னால அந்த போலீஸ் அதிகாரியை தடுத்து போராட முடியும்னு நினைக்கிறீங்களா? ஜார்ஜ் இறந்த இடத்துக்கு 5 அடி தூரத்தில்தான் நான் நின்று கொண்டிருந்தேன்.. மிக மோசமான சம்பவம் அது” என்று ஜார்ஜ் பிளாயிடின் கழுத்தை நெரித்து கொன்ற வீடியோவை எடுத்த சிறுமி அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார். “ஆளுநர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களால் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லையா? அப்படி என்றால் நான் ராணுவத்தை இறக்க போகிறேன்” என்று டிரம்ப் கதறி கொண்டே இருக்கிறார். ஆனாலும் அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டே இருக்கிறது.. இதற்கெல்லாம் கருப்பினரான ஜார்ஜை கொன்ற அந்த 8 நிமிட, 46 செகண்ட் ஓடும் வீடியோதான்!

மின்னபொலிஸ் நகரில், மே 25-ம் தேதி ஒரு பெட்டிக்கடைக்கு ஜார்ஜ் சென்றிருக்கிறார்.. சிகரெட் வேண்டும் என்று கேட்டு 20 டாலர் நோட்டை எடுத்து நீட்டுகிறார்.. உடனே கடைக்காரரையோ, அந்த நோட்டை பார்த்ததும் போலி டாலர் என தவறுதலாக நினைத்துகொண்டு, போலீசுக்கு போன் செய்கிறார்.. 4 போலீசாரும் அடுத்த செகண்டே அங்கு வந்து ஜார்ஜை விசாரிக்கிறார்கள்.

விசாரணையின்போது ஆவேசமடைந்த ஒரு உயர் போலீஸ்காரர் டெரண் ஜோவின் என்பவர் ஜார்ஜ் கழுத்தை பிடித்து முட்டியில் அமுக்குகிறார்.. கழுத்து நெரிபடுகிறது.. மூச்சு விடமுடியவில்லை என்று ஜார்ஜ் கதறுகிறார்.. ஆனாலும் அந்த போலீஸ் அதிகாரி முட்டியை சிறிதும் நகர்த்தாமல், அழுத்தத்தை மட்டும் மேலும் மேலும் தந்து கொண்டே இருக்கிறார்.. இதை உடன் இருந்த மற்ற 3 போலீஸ்காரர்களும் வேடிக்கை பார்க்கிறார்கள்.

அதிர்வலை மூச்சு திணறி திணறியே ஜார்ஜ் உயிர் பிரிகிறது. இந்த வீடியோதான் உலகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது.. இதன் தாக்கம் இன்னமும் குறையவில்லை.. உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது.. அதிபர் பதவிக்கு சிக்கல் வரும் அளவுக்கு சர்ச்சை கிளம்பி உள்ளது.. அடுத்த வரப்போகும் தேர்தலில் அதிபர் நிலை கேள்விக்குறியாகும் அளவுக்கு இந்த சம்பவம் வெடித்து வன்முறையை கிளப்பி விட்டு வருகிறது.

மார்ட்டின் லூதர் கிங்குக்கு பிறகு இப்படி ஒரு போராட்டம் இப்போதுதான் வல்லரசு நாட்டில் நடக்கிறது. இந்த விவகாரத்துக்கு காரணமாக இருந்த வீடியோவை எடுத்தது ஒரு சிறுமி.. அவருக்கு 17 வயது.. பெயர் டார்னெல்லா ஃப்ரேஸர். இவரும் கருப்பின சிறுமிதான். வீடியோ எடுக்கும்போதே கதறி துடிக்கிறார் சிறுமி.. “ஜார்ஜ்தான் உயிருக்கு போராடுகிறார்ன்னு தெரியுதே, ஏன் காப்பாற்ற போகவில்லை” என்று டார்னெல்லாவை பார்த்து கேள்வியும் பலர் எழுப்பி கொண்டே இருந்தனர்.

இந்நிலையில், நவ்தீஸ் மீடியா மூலம் தன் தரப்பு பதிலை சொல்லி உள்ளார் டார்னெல்லா. அதில், “நான் ஒரு சின்ன பெண்.. மைனர் பெண்.. அங்கே நடந்த அந்த சம்பவத்தை பார்த்ததும் பயந்துட்டேன்.. என்னால அந்த போலீஸ் அதிகாரியை தடுத்து போராட முடியும்னு நினைக்கிறீங்களா? ஜார்ஜ் இறந்த இடத்துக்கு 5 அடி தூரத்தில்தான் நான் நின்று கொண்டிருந்தேன்,.. அந்த நேரத்தில் என் உணர்வை எப்படி சொல்வேன் என தெரியவில்லை. மிக மோசமான சம்பவம் அது.. இந்த விஷயத்தை என் இடத்தில் இருந்து பார்த்திருந்தால்தான் புரியும்” என்கிறார்.

Source : One India

போராட்டத்தை தடுக்க இராணுவம் வரும்- அமெரிக்க அதிபர்

அமெரிக்காவில் போராட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்தப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் போலீஸ் அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து 75க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. ஒருசில இடங்களில் வன்முறை வெடித்ததால் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கபட்டு தீக்கிரையாக்கப்பட்டன. நியுயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளன.

அமெரிக்கா முழுவதும் போராட்டம் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதால் நிலைமையை சமாளிக்க பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.போராட்டக்காரர்களின் இடிமுழக்கம் அமெரிக்க அதிபர் டிரம்பை பதுங்கு குழிக்குள் தள்ளிய நிலையில், ஜார்ஜ் ஃபிளாய்ட் விவகாரம் குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய டிரம்ப், ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்திற்கு நீதி வழங்கப்படும் என்றும் அமெரிக்க மக்களை பாதுகாத்து நாட்டின் சட்டத்திட்டங்களை நிலைநாட்டுவதே தனது கடமை எனவும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் தற்போது நடைபெறுவது அமைதியான போராட்டம் அல்ல எனக்கூறிய டிரம்ப், இவை உள்நாட்டுப் பயங்கரவாத செயல் என கடுமையாக சாடியுள்ளார். அப்பாவி மக்களின் வாழ்க்கையை அழிப்பதும், ரத்தம் சிந்தப்படுவதும் மனிதக்குலத்திற்கு எதிரான ஓர் குற்றம் எனவும் டிரம்ப் பேசியுள்ளார்.

மாநில நிர்வாகம், போராட்டத்தை தடுக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் ராணுவத்தை கொண்டு விரைவில் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவேன் எனவும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.ஏற்கனவே போராட்டக்காரர்களை குண்டர்கள் என அமெரிக்க அதிபர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது ராணுவத்தை பயன்படுத்த உள்ளதாக மிரட்டல் விடுத்திருப்பது போராட்டக்காரர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது.

இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கைகளும் வெளியாகியுள்ளன. அதில் அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்து நசுக்கப்பட்டதால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.1968ல் மார்டின் லூதர் கிங் கொலைக்கு பிறகு அமெரிக்காவில் தற்போது தான் இந்த அளவிற்கு இனக் கொந்தளிப்பும் அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளது.

Source : News7

அமெரிக்காவுடன் இணையவிரும்பும் WHO…

அமெரிக்கா உடன் இணைந்து செயல்படவே விரும்புவதாக உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் டெட்ராஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதாரவாக உலக சுகாதார அமைப்பு உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த அமைப்பிற்கு முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ. 3000 கோடி நிதியை நிறுத்தினார். ஆனாலும், உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஆண்டிற்கு 450 மில்லியன் டாலர் வழங்கி வந்த அமெரிக்காவின் உறவை விட ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர் கொடுக்கும் சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு உறவு வைத்துள்ளது. இனி அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டிப்பதாக, அறிவித்தார்.

இந்நிலையில், ஜெனீவாவில் செய்தியாளர்கள் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கூறுகையில், பல ஆண்டுகளாக அமெரிக்க அரசு மற்றும் அதன் மக்களின் பங்களிப்பும், தாராள மனப்பான்மையும் மகத்தானது. இந்த ஒத்துழைப்புடன் தொடர்ந்து அமெரிக்காவுடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம், என்றார்.

அமெரிக்கா அதிபர் ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் உரையாடல் …

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய ஏழு நாடுகளும் ஜி7 நாடுகள் குழுவில் இருக்கின்றன. இந்நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து சர்வதேச பொருளாதார, நிதி விவகாரங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஜி7 மாநாட்டை நடத்தும் பொறுப்பு அமெரிக்கா வசம் வந்துள்ளது. ஆக, இம்மாதம் வெள்ளை மாளிகையில் ஜி7 மாநாட்டை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து ஜி7 மாநாட்டை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்த ட்ரம்ப், ஜி7 ஒரு காலாவதியான குழு எனவும் தெரிவித்தார். மேலும், இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை ஜி7 குழுவில் இணைக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்துள்ளார். இந்த அழைப்பில் கொரோனா கொள்ளை நோயை தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள், உலக பொருளாதாரங்களை மீண்டும் தொடங்குவது, ஜி7 மாநாட்டை கூட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க புதினுக்கு டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிகிறது. ஜி7 குழுவில் ரஷ்யாவை இணைக்க இங்கிலாந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும், ரஷ்யாவை மீண்டும் இணைக்க ட்ரம்ப் ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இந்தாண்டுக்கான ஜி7 மாநாட்டில் ரஷ்யா மட்டுமல்லாமல் இந்தியா, தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இந்தாண்டுக்கான ஜி7 மாநாட்டுக்கு அமெரிக்கா தலைமை வகிப்பதால் கூடுதல் நாடுகளுக்கு டொனாட் ட்ரம்பால் அழைப்பு விடுக்க முடியும். ஆனால், ஜி7 குழுவில் ஒரு நாட்டை நிரந்தரமான இணைக்க வேண்டுமெனில் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

டொனால்ட் ட்ரம்ப், விளாதிமிர் புதினுடனான தொலைபேசி அழைப்பில் எண்ணெய் சந்தைகள், மூலோபாய நிலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் அலுவலகமான கிரெம்லின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 30ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் குறித்து ட்ரம்புக்கு புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறும் போராட்டம் குறித்து இரு அரசுகளும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. மேலும், மே மாதத்தில் ரஷ்யாவுக்கு 200 வெண்டிலேட்டர்கள் அனுப்பப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks To: samayam

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by