Thursday , August 13 2020
Breaking News
Home / உலகம் (page 3)

உலகம்

உலகம்

இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: இந்தியாவின் வடக்கு லைன் ஆப் கன்ட்ரோல் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார். சர்வாதிகார ஆட்சிகள் இந்த வகையான நடவடிக்கைகளை எடுப்பதாக குற்றம்சாட்டினார். லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள லைன் ஆப் கன்ட்ரோலின் பல பகுதிகளில் அண்மை காலமாக இந்தியா மற்றும் சீனா தனது ராணுவ படைகளை குவித்து வருகின்றது. இரு நாடுகளும் படைகளை குவிப்பதால் இந்தியா -சீனா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களுக்குப் பிறகும் இரண்டு நாடுகளும் எல்லையில் தனித்தனி முகாம் அமைத்து செயல்படுவது பதற்றம் தனிய வாய்ப்பில்லாத நிலை உள்ளது. சீனா இந்தியா எல்லையில் தொடந்து அத்துமீறி வருகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்து வருகிறது.

சீனா அத்துமீறல் அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ இந்திய சீன எல்லையில் நடப்பது குறித்து பேசுகையில் , “இன்றும் கூட இந்தியாவின் வடக்கு லைன் ஆப் கன்ட்ரோல் பகுதியில் சீனா தனது படைகளை குவித்து வருவதை நாங்கள் பார்க்கிறோம். சீன கம்யூனிஸ்ட் அரசு, வுஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து உலகத்திற்கு அளிக்க வேண்டிய பதிலை மறைத்து தாமதப்படுத்தியது. இந்த அரசு தான் ஹாங்காங் மக்களின் அற்புதமான சுதந்திரங்களை அழிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சீனா அத்துமீறல் அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ இந்திய சீன எல்லையில் நடப்பது குறித்து பேசுகையில் , “இன்றும் கூட இந்தியாவின் வடக்கு லைன் ஆப் கன்ட்ரோல் பகுதியில் சீனா தனது படைகளை குவித்து வருவதை நாங்கள் பார்க்கிறோம். சீன கம்யூனிஸ்ட் அரசு, வுஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து உலகத்திற்கு அளிக்க வேண்டிய பதிலை மறைத்து தாமதப்படுத்தியது. இந்த அரசு தான் ஹாங்காங் மக்களின் அற்புதமான சுதந்திரங்களை அழிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ இந்திய சீன எல்லையில் நடப்பது குறித்து பேசுகையில் , “இன்றும் கூட இந்தியாவின் வடக்கு லைன் ஆப் கன்ட்ரோல் பகுதியில் சீனா தனது படைகளை குவித்து வருவதை நாங்கள் பார்க்கிறோம். சீன கம்யூனிஸ்ட் அரசு, வுஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து உலகத்திற்கு அளிக்க வேண்டிய பதிலை மறைத்து தாமதப்படுத்தியது. இந்த அரசு தான் ஹாங்காங் மக்களின் அற்புதமான சுதந்திரங்களை அழிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது…

Thanks To: One india tamil

மக்கள் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது- மோடி

கொரோனா வைரஸ் பேரிடரால் ஏழைகளும், தொழிலாளர் வர்த்தகத்தினரும் அனுபவித்துவரும் வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக பேசினார்.இதுதொடர்பாக ‘மனதின் குரல்’ (மான் கி பாத்) வானொலி நிகழ்ச்சியில்பிரதமர் மோடி பேசியது:

கொரோனாவுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர்.பொதுமுடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கியக் காரணம். இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதைத்தான் உலகமே உற்று நோக்கியுள்ளது

பொருளாதாரத்தின் ஒரு அங்கமான தொழில் துறை தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் நாம் கூடுதல் கவனத்தோடு இன்னும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். தனிநபர் இடைவெளி, முக கவசம் அணிவதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது.

கொரோனா துயரம் எந்த ஒரு பிரிவினரையும் விட்டு வைக்கவில்லை. சாமானியர்கள், ஏழைகள் தற்போது அனுபவித்துவரும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஏழைகளுக்கு உதவும் நோக்கில் பல்வேறு தரப்பினரும் பணியாற்றி வருகின்றனர்.

மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப, ரயில்வே துறை சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் பொருளாதாரத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கிராமங்களில் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்சார்பு இந்தியா திட்டம் நம் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும்.கொரோனாவிற்கு எதிரான போர் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். யோகா, ஆயுர்வேதாவை நோக்கி மக்கள் நடைபோட்டு வருகின்றனர்.

யோகா மூலம் சுவாசப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்கள் முயன்று வருகின்றனர். பிராணயாமம் உள்ளிட்ட சில பயிற்சிகள் நமக்கு மிகச்சிறந்த தீர்வை அளிக்கும். அனைவருக்கும் பரிசோதனை, சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று பிரதமர் மோடி பேசினார்.

Source : tamil.samayam

உலக புகையிலை எதிர்ப்பு தினம்

உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஒரு சிகரெட்டில் 4000 வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கு மேல் மோசமான வேதிப்பொருட்கள் ஆகும்.

புகை பிடிப்பதனால் புற்றுநோய்க் கூட ஏற்படும். புகை பிடிப்பதால் மூச்சி எடுக்கும், மயக்கம் வரும், இருமல் வரும். தொடர்ந்து புகைப்பதனால் உடல் எதிர்ப்புசக்தியை இழந்து மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஏன் மரணம் கூட ஏற்படலாம்.

கார்பன் மோனாக்சைடு உடலில் செல்லுவதால் இதயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு நுரையீரலுக்கு மற்றும் கை கால்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. இதனால் நுரையீரல், இதயச் செயலிழப்பு ஏற்படலாம் மேலும் உடளில் ஊனமும் ஏற்படலாம்.

ஒவ்வோர் ஆண்டும் புகையிலை பயன்படுத்துவதால் உலகில் 70 லட்சம் பேர் பலியாகின்றனர்.உலகில் இறக்கும் 10 பேரில் ஒருவர் புகை பிடிப்பதால் இறக்கிறார். புகையிலை தன் உயிரைக் கெடுக்கும் அடுத்தவன் உயிரையும் கெடுக்கும்.

எனவே புகை பிடித்தலை பற்றி நல்ல விழிப்புணர்வு வேண்டும். முடிந்தவரை புகை பழக்கத்தை குறைத்து கொள்வது நல்லது.

அமெரிக்காவில் போராட்டத்தை கட்டுபடுத்த ராணுவம் களம் இறங்கியது..!

மின்னபொலிஸ் அமெரிக்காவில், கறுப்பின இளைஞரின் கழுத்தை நெரித்து கொன்ற, மின்னபொலிஸ் போலீஸ் அதிகாரி மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க ராணுவத்தின் போலீஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், 25ம் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார்.இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னபொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரி டெரெக் சவுவின், 44, கைது செய்யப்பட்டு, அவர்மீது, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, நேற்று முன்தினம் இரவு, 8:௦௦ மணி முதல், நேற்று காலை, 6:௦௦ மணி வரை, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எனினும், ஊரடங்கை பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மக்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். உணவகம், வங்கி ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல மணி நேரமாக எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுப்படுத்தினர்.

இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க ராணுவத்தின் போலீஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட பல நகரங்களில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. புரூக்ளினில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஹூஸ்டனில் நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, காரில் வந்த ஒரு மர்ம நபர், துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்.

இதில், 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். கத்தியால் தாக்கிய பெண் சுட்டுக்கொலைபுளோரிடா மாகாணத்தின் டெம்பிள் ரெரேஸ் பகுதியில் உள்ள அரசு அலுவலகத்திற்கு வெளியே, ஹேபா மும்தாஜ் அலாஜாரி, 21, என்ற பெண், அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவரை, கத்தியால் குத்தினார். இதைக் கண்ட மற்ற போலீசார், அப்பெண்ணை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்தியால் குத்தியதில், போலீஸ் அதிகாரி காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்த விசாரணை துவங்கப்பட்டுள்ளது.

source : Dinamalar.

எட்டு எட்டா தமிழகத்தை பிரிச்சிக்கோ.. எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்கோ!


எட்டு எட்டா தமிழகத்தை பிரிச்சிக்கோ.. எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்கோ!

சென்னை: தமிழகத்தில் பொது பேருந்து போக்குவரத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.
நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இந்தியா முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கிற்கான புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.
போக்குவரத்திற்காக தமிழகத்தை எட்டு எட்டாக பிரித்த அரசு.


மண்டலம் 1- கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்
மண்டலம் 2- தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி
மண்டலம் 3- விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி
மண்டலம் 4- நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை
மண்டலம் 5- திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்
மண்டலம் 6- தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி
மண்டலம் 7- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
மண்டலம் 8- சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதி


மண்டலம் 7-இல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னைகாவல் எல்லைக்குள்பட்ட பகுதிகள் தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.
மண்டலம் 7, மண்டலம் 8-க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கபபடும்.

தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50 சதவீத பேருந்துகள் இயக்கம்.. அரசு அறிவிப்பு
மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ பாஸ் தேவையில்லை என்ற நிலையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ பாஸ் அவசியமில்லை.
அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.
அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும்.
இ பாஸ் முறை
அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ பாஸ் தேவையில்லை.
வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரவும் மண்டலங்களுக்கிடையே சென்று வரவும் இ பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

கொரோன காதல் – எகிப்து

எகிப்தின் மருத்துவமனையில் ஒரு கொரோனா நோயாளி அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரை காதலித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு குணமடைந்து மருத்துவரை கரம்பிடித்தார்.

உலக அரசியல் பற்றிய நந்தினி ஆனந்தனின் கருத்து..!

உலகின் இயற்கை வளங்களையும் உலக மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வத்தையும் கொள்ளையடிப்பது,பங்கு பிரிப்பது- ஆகியவற்றில் நடக்கும் சண்டைகள், சச்சரவுகள்,பேரங்களே உலக அரசியல்..

உலக அரசியலே ஒவ்வொரு நாட்டின் அரசியலையும் தீர்மானிக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும் உலக அரசியலை கற்றுக் கொள்ள வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது மிக அத்தியாவசியமாகி விட்டது..

ஏனென்றால் நாளை நாம் உயிருடன் இருப்போமா? இல்லையா என்பதை தீர்மானிக்கும் கட்டத்துக்கு உலக அரசியல் வந்துவிட்டது..

-நந்தினி ஆனந்தன்..

இந்தியா-சீனா எல்லை பிரச்சனை- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..!

இந்தியா-சீனா எல்லை பிரச்சனை குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதிகளில் சீனா, தனது ராணுவத்தை குவித்துள்ளது. அதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் லடாக் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார்.

இதனை இரு நாடுகளிடமும் தெரிவித்து விட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, சீனாவுடனான எல்லை பிரச்னையை அமைதியாகத் தீர்க்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

எல்லை விவகாரத்தில் இந்திய ராணுவம் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்வதாகவும், இந்திய இறையாண்மையை கட்டிக்காக்கும் வகையில் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

இதனிடையே, இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சனை குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவுடனான இந்த விவகாரத்தால், பிரதமர் மோடி சந்தோஷ மனநிலையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் அதிக மக்கள் தொகையையும், சக்திவாய்ந்த போராளிகளையும் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள டிரம்ப், எல்லை பிரச்சனை விவகாரத்தில் இருநாடுகளும் மகிழ்ச்சியாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

மக்களுக்குரூ.10000 வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் – காங்கிரஸ்.

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்குகளில் 10 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு உடனடியாக செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தொடர் ஊரடங்கால் மக்கள் சந்தித்து வரும் பாதிப்புகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் சமூக ஊடகங்கள் மூலம் 3 மணி நேரத்திற்கு விவாதிக்கும் பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி, தேசிய அளவில் இன்று முன்னெடுத்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரை இந்த பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
அதில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களின் நலன் கருதி அவர்களின் வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு உடனடியாக தலா 10 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என்று கோரியுள்ள அவர்கள், வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை, சிறப்பு ரயில்கள் மூலம் கட்டணம் இன்றி சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 3 மாத ஊதியத்தை அரசே வழங்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும், கிராமப்புற மக்களின் நலன் கருதி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் எனவும் அந்த பிரச்சாரத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

புது அவதாரம் எடுக்கும் வடிவேலு…!

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் வடிவேலு. தனது வித்தியாசமான பாடி லேங்குவேஜ், டயலாக் டெலவரியால் கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகர் ஆனார்.

ஒரு கட்டத்தில் வடிவேலு ஹீரோவாகவும் ஆனார். அவர் சிம்புதேவன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் சூப்பர் ஹிட்டானது. அந்த பட வசனங்கள் இன்றும் கூட பிரபலம். 23ம் புலிகேசி ஹிட்டானதை பார்த்துவிட்டு அதன் அடுத்த பாகத்தை 24ம் புலிகேசி என்கிற பெயரில் சிம்புதேவன் இயக்கினார். அந்த படத்தை பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் தயாரித்தார்.

ரூ. 6 கோடி செலவில் செட் போட்டு படப்பிடிப்பை துவங்கிய 10வது நாளே வடிவேலுவுக்கும், சிம்புதேவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து நின்றுபோன படப்பிடிப்பு இதுவரை நடக்கவில்லை. 24ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்து பிரச்சனை செய்ததால் வடிவேலுவின் கெரியர் பாதிக்கப்பட்டது.

வடிவேலு மீது படக்குழு சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதற்கு அவரோ, படப்பிடிப்பை துவங்க தாமதமானதால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதுடன், பொருளாதார இழப்பும் ஏற்பட்டதால் இனியும் அந்த படத்தில் நடிக்க முடியாது என்றார். தொடர்ந்து படத்தில் நடிக்காவிட்டால் வடிவேலு ரூ. 9 கோடி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தெரிவித்தார்.

ரூ. 9 கோடி கொடுப்பதற்கு பதில் நடித்துவிடலாம் என்கிற முடிவுக்கு வடிவேலு வந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை 24ம் புலிகேசி படத்தின் வேலைகள் துவங்கவில்லை. வடிவேலுவை திரையில் புதுப்படங்களில் பார்த்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.

வடிவேலு உலக நாயகன் கமல் ஹாஸனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் வடிவேலு வெப் தொடரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தற்போது ரசிகர்களிடையே வெப் தொடர்கள் அதிக பிரபலமாகி வருவதால் கோலிவுட் கலைஞர்கள் தங்களின் கவனத்தை அந்த பக்கம் திருப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் வடிவேலுவும் தன் கவனத்தை வெப் தொடர் பக்கம் திருப்பியிருக்கிறாராம். இது தொடர்பாக ஓடிடி நிறுவனம் ஒன்று வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாம். அப்பொழுது வடிவேலு பெரும் தொகையை சம்பளமாக கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வடிவேலுக்கு வசனம் எழுதிய ஒருவர் தான் அந்த வெப் தொடரை இயக்கப் போகிறாராம். ஆம், வடிவேலு நடிக்கும் வெப் தொடர் முழுக்க முழுக்க காமெடியாக இருக்குமாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.

ஏனென்றால் வடிவேலு வெப் தொடரில் நடிக்கிறார் என்று கடந்த ஆண்டு கூட செய்திகள் வெளியாகின. அதை பார்த்த வடிவேலு நான் எந்த வெப் தொடரிலும் நடிக்கவில்லை என்றார். வடிவேலுவை பற்றி ஏதாவது வதந்தி பரவுவது வழக்கமாகிவிட்டதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கும் வரை நம்ப முடியாது.

வடிவேலு படங்களில் நடிக்காவிட்டாலும் மீம்ஸுகள் மூலம் தினம் தினம் ரசிகர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : tamil.samayam

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by