40 வருடமாக அம்மாவை தேடும் மகன்..! தன் அடையாளத்தை தேடி ஒரு பயணம்..!
Thanks to refer ilangyar Kural this news (Neeraj Agrahari https://www.facebook.com/neeraj.agrahari.336 )
இந்திய ஒன்றியத்தின் நீட் அராஜகத்திற்கு எதிராக தினகரன் கூட்டிய கூட்டத்தை மட்டும் பேசாமல் அவர் கூட்டிய கூட்டத்திற்கு காரணம் இவை தான் என்று பேசுவோம்.
நீட் தேர்வு என்பது குளோபல் என்ட்ரன்ஸ் டெஸ்ட் … இது இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வு அல்ல
யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ??
1) இந்தியர்கள்
2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் )
3) NRI வெளிநாடு வாழ் இந்தியர்கள்
4) ஓவர்சீஸ் இன்டியன்
5) POI வம்சாவளியினர்
எத்தனை பேர் எழுதினார்கள் ??
1) இந்தியர்கள்
அப்ளிகேஷன் போட்டவர்கள் 1136206 , எழுதியவர்கள் 1087840 ,
பாஸ் செய்தவர்கள் 609000 …
பாஸ் செய்த 6 லட்சம் மாணவர்களுக்கும் சீட் கிடைக்கலியே ஏன் ??? பிறகு எதற்கு இந்த தேர்வு ??
2) வெளிநாட்டினர் ( எந்த நாட்டினரும் எழுதலாம் )
அப்ளிகேஷனை போட்டவர்கள் 612
எழுதியவர்கள் 391
சீட் வாங்கியவர்கள் 245 …. இவங்களுக்கு மட்டும் எப்படி சீட் கிடைத்தது ??
3) NRI
எழுதியவர்கள் 1370
சீட் வாங்கியவர்கள் 1106
இது எப்படி சாத்தியம் ஆச்சு ??
4) overseas Indian
எழுதியவர்கள் 426
சீட் வாங்கியவர்கள் 321
இதுவும் எப்படி சாத்தியம் ஆச்சு ??
5) person of Indian origin பல தலைமுறைகளுக்கு முன்னே இந்தியாவை விட்டு வெளியேறி எந்த தொடர்பும் இல்லாத வெளிநாட்டு குடிமக்கள்
எழுதியவர்கள் 58
சீட் வாங்கியவர்கள் 47
இதுவும் எப்படி சாத்தியம் ஆச்சு ???
ஏன் என்றால் நீட் தேர்வு அரேன்ஜ்மென்ட் தான் சிபிஎஸ்இ ஆனால் நடத்துவது Prometric என்கிற அமெரிக்க நிறுவனம் .. சென்ற ஆண்டில் இந்த நிறுவனத்தின் இணையதளம் ஹேக் செய்து நீட் தேர்வு வினாக்கள் திருடப்பட்டது என்று அந்த நிறுவனமே ஒத்துக்கொண்டுள்ளது.
அப்படி என்றால் வெளிநாட்டு நிறுவனம் நடத்தும் குளோபல் அதாவது இன்டர்நேஷனல் தேர்வை என்ன டேஷ்க்கு தமிழ்நாட்டில் ஏதோ மூலையில் வாழும் மிடில்கிளாஸ் , ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் எழுத வேண்டும் ???
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாட்டில் கட்டிய மருத்துவ கல்லூரிகளில் வெளிநாட்டினர் வந்து ப்ரீ சீட்டில் படிக்க வைக்கும் , இந்த தேர்வில் தான் தமிழ்நாடு அரசு பள்ளியில் படித்து சீட் வாங்கியவர்கள் மொத்தமே 5 பேர்தான் …. புரிந்துகொள்வோம் !! Courtesy Goes to Lines Media.
செல்போன் பயன்பாட்டினை பொறுத்தவரை ஒரு காலத்தில் ஏர்டெல், வோடோஃபோன், பிஎஸ்என்எல், ஏர்செல் போன்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கோலோச்சி வந்தன. ஆனால், எப்போது இவர்களுக்கு போட்டியாக ஜியோ சிம் கார்டு களத்தில் இறங்கியதோ, அப்போதே மற்ற நெட்வொர்க் நிறுவனங்களின் சரிவு தொடங்கிவிட்டது. ஏனெனில், இணையதள சேவையை இலவசமாக அள்ளிக் கொடுத்தது ஜியோ. வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம். அதனால், ஏராளமானோர் ஜியோ சிம் வாங்கினர்.
ஏற்கெனவே ஒரு சிம் வைத்திருந்த போதும் கூடுதலாக ஜியோ சிம் வாங்கி பயன்படுத்தினர். அதாவது இன்கம்மிங் கால்களுக்கு ஏற்கெனவே வைத்திருந்த சிம் கார்டுகளையும், அவுட் கோயிங் கால்களுக்கு ஜியோ சிம்மையும் பயன்படுத்தினார்கள். இதுதான், மற்ற நெட்வொர்க்களுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணி சரிவை ஏற்படுத்தியது. இதில், நஷ்டத்தை தாங்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் சேவையை நிறுத்திக் கொண்டது.
ஏற்கெனவே ஜியோவின் வருகையால் சரிவை சந்தித்து வந்த மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு, ‘ரிங்’ ஆகும் நேரத்தை ஜியோ குறைத்தத்து கோபத்தை மூட்டியது. ரிங் ஆகும் நேரத்தை குறைத்ததால் மற்ற நெட்வொர்க் கால்கள் மிஸ்டு கால் ஆக மாறி ஜியோ வாடிக்கையாளர் அவுட் கோயிங் செய்யும் நிலை உருவாகும்.
ஜியோவில் இருந்து இன் கம்மிங் கால் வந்தால் அதனை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் 6 பைசா கொடுக்க வேண்டியிருக்கும். இதுகுறித்து, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான ட்ராய் இடம் அவர்கள் புகார் அளித்தனார். அந்த புகாரின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவிற்கு ட்ராய் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஒரு போன் காலுக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. ட்ராய் நிறுவனத்தின் வலுக்கட்டாயமான அறிவுறுத்தலை அடுத்து ஜியோ இந்த முடிவை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தகவலின்படி, ஜியோ சிம் கார்டில் இருந்து மற்றொரு ஜியோ சிம்மிற்கு போன் செய்தாலோ, லேன் லைண்ட்க்கு போன் செய்தாலோ இந்த கட்டணம் கிடையாது. அதேபோல், வாட்ஸ் அப், பேஸ்டைம் உள்ளிட்ட கால்களுக்கும் கட்டணம் கிடையாது. வழக்கம் போல் மற்ற நெட்வொர்கில் இருந்து வரும் கால்கள் இலவசம்தான்.
இருப்பினும், வாய்ஸ் கால்க்கு செலுத்தும் இந்த கட்டணத்திற்கு இணையாக டேட்டா இலவசமாக வழங்கப்படும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. Coursty Goes to http://ippodhu.com
அரவக்குறிச்சியில் களம் கண்டு மாற்றத்தை உருவாக்க நினைத்த தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் அழைக்கிறார் இளைஞர்களை, இளைஞர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் நம் உரிமையை மீட்க என முன்னாள் அரவக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளர் திரு.இராஜ்குமார் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு (Mission 2021) தயாராக அழைப்பு விடுத்தார்.
– லோகேஷ்
இளைஞர்குரல்
பஞ்சமி நிலங்கள் / தலித் உரிமை களத்தின் ‘நிஜ அசுரன்’.!
தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “அசுரன்” திரைப்படம் பஞ்சமி நிலங்கள் குறித்து சில இடங்களில் பேசுவதாகவும்,அதன் தாக்கத்தால் சமூக வலைத்தளங்களில் பஞ்சமி நிலம் வரலாறு,பஞ்சமி நிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கிறது…
இந்திய சாதிய கட்டமைப்பில் விளிம்புநிலை மக்களுக்கு ஏன் நிலங்கள் வழங்க வேண்டும் என்று பஞ்சமி நிலங்களின் “X-Factor”ஆக விளங்கிய ஜெ.எச்.ஏ.திரமென்ஹீர் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த போது,பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அளித்த சென்னேரி பறையர் இன மக்களின் நிலை குறித்த அறிக்கையில் (Notes On Pariah) குறிப்பிட்டு இருந்தது…
‘’கணத்த இதயத்துடன் இதை குறிப்பிடுகிறேன்.சென்னேரி பகுதி பறையர் இன மக்கள் வழக்கமான மனிதர்களை விடவும் கணிசமாக என்று கூற இயலாத அளவுக்கு கீழ் நிலையில் உள்ளனர்.அவர்களில் பெரும்பாலனோர் மோசமான ஊட்டச்சத்து கொண்டவர்களாக,படுபயங்கரமான குடிசையில்,மோசமான ஆடைகளை அணிந்து,தொழுநோய் மற்றும் மற்ற கொடுரமான நோய்களை கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்களுடைய குடிசைகள் பன்றிகள் வசிக்கும் இடங்களை போன்றும், கல்லாதவர்களாகவும்,யாராலும் கவனிக்கப்படாத,இரக்கப்படாத மனிதர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இது அனைவரும் அறிந்த உண்மைதான் என்றாலும்,நான் இவ்வாறு இந்த மனிதர்களைப் பற்றி கூறுவதற்காக மதராஸ் மாகாண வருவாய் துறை மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.இந்தியா நாட்டினுடைய அல்ல,ஆனால் இங்கிலாந்து மக்களின் பொது மனசாட்சி இந்த மகிழ்ச்சியற்ற பரிதாபத்துக்குரியவர்களின் நிலையை கண்டு,அதை தணிப்பதற்காக வெகுண்டு எழும்காலம் வெகுதொலைவில் இல்லை.’’
“பறையர்களிடம் இருக்கும் பொருட்கள் மிகவும் பழமையானது. (மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வாங்கி வந்த பொருட்கள் போல). மேல் சாதி இந்துக்கள் இவர்களுக்கு மிகக் கேவலமான வேலைகளையே கொடுக்கின்றனர். இந்து மதம் இவர்களது ஆன்மீக வாழ்விற்கோ அல்லது பொருளாதார முன்னேற்றத்திற்கோ எந்தவிதத்திலும் பயனளிக்கவில்லை. இந்துக்கள் இவர்களை மனிதக்குலத்தின் மிகத்தாழ்ந்த இனமாகவே கருதுகிறார்கள். மிக மோசமான சுகாதாரமற்ற நிலையில் வாழ்கிறார்கள்”
“1844 ல் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னும் அடிமைகளாக இருந்த பறையர்கள் படியாட்கள் என்ற முறையில் மீண்டும் அடிமைகளாக்கபடுகின்றனர். இவர்கள் தாங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக தங்களையும் தங்கள் வாரிசுகளையும் மொத்தமாக அடிமைகளாக்கிக்கொள்கின்றனர். இதிலிருந்து விடுபட இவர்களுக்கு ஒரே வழிதான் இருந்தது. அதாவது மற்றொரு எஜமானிடம் கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு புது எஜமானிடம் மனித அடமானமாகப் போவதுதான் அந்த வழி. வேறு வழியில் விடுபட முயலும் பறையர்களை கிராமம் அல்லது தாலுக்கா நீதிமன்றத்தில் உடன்பாட்டை மீறினார்கள் என்று (!) ‘உடன்பாட்டு மீறல் சட்டத்தின்’கீழ் எஜமானர்கள் வழக்கு தொடுத்து தண்டனை வாங்கிக்கொடுக்கிறார்கள். மிராசுதாரர்களாக பிராமணர்களும் வெள்ளாளர்களும் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களே நிலங்கள் அனைத்தையும் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து உள்ள இடைச்சாதியினரும் நிலங்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் கடைசியிலுள்ள பறையர்கள் எல்லோருமே நிலமற்ற அடிமைகளாக இருக்கிறார்கள். அப்படியே பறையர்கள் புறம்போக்கு நிலத்திற்கு அரசிடம் விண்ணப்பம் செய்தாலும் அந்த நிலம் மிராசுதாரருக்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அரசு கேட்கும்(!). மிராசுதாரர் வேண்டாம் என்று சொல்வது கிடையாது. அடுத்து பட்டாதாரரிடம் அந்த நிலம் வேண்டுமா என்று அரசு கேட்கும். அவரும் வேண்டாம் என்று சொன்னால்தான் அந்த புறம்போக்கு நிலம் பறையர்களுக்கு கிடைக்கும்.ஆனால் பறையர்கள் நிலம் வைத்திருக்க விரும்பி அரசைக்கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்று எண்ணி புறம்போக்கு நிலத்தை எடுத்து அதைக் கஷ்டப்பட்டு சரிசெய்து விளை நிலமாக்கினால் அதுவரை அமைதியாய் இருக்கும் மிராசுதாரர்கள் கடைசியில் அந்த நிலத்தை அபகரித்துவிடுகின்றார்கள்.”
“சிறிது நிலம், சொந்தமான குடிசை, எழுதப்படிக்க தெரிந்திருத்தல், தனது உழைப்பில் சுதந்திரம், தன்மானம் ஆகியவற்றை அவர்களுக்கு கொடுத்தால் பறையர்களின் வாழ்வு இப்போதிருக்கும் மகிழ்ச்சியற்ற அடிமை நிலையிலிருந்து மாறுபட்டதாக இருக்கும்” என்று 5 அக்டோபர் 1891 அன்று கையெழுத்திட்டு தன் அறிக்கையை ஜெ.எச்.ஏ.திரமென்ஹீர் சமர்ப்பிக்கிறார். 1891 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்திற்கு பிறகு 1892 செப்டம்பர் 30 அன்று அரசாணையை (அரசாணை எண் 1010/ நாள் : 30.09.1892) வெளியிட்டது.இச்சட்டத்தின்படி “பஞ்சமி நிலம்” என்ற பெயரிலும் “டி.சி. நிலம் (Depressed Class Land)” என்ற பெயரிலும் இந்தியா முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டு,தமிழகத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட்டது…
பஞ்சமி நிலம் குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஜெ.எச்.ஏ. திரமென்ஹீர் குறித்து நாம் நினைவு கூறுவது இன்றியமையாததாகும்…
இன்றைய காலக்கட்டத்தில் தலித்கள் சாதி இந்துக்களிடம் பஞ்சமி நிலங்களை வஞ்சகமாக இழந்து கையருநிலையில் நிற்கிறோம்…இருப்பினும் இன்று இல்லை என்றாலும்,என்றாவது ஒருநாள் திரமென்ஹீர் விரும்பிய படி பஞ்சமி நிலங்கள் தலித் மக்களிடமே நிச்சயம் பெற்று தரப்படும் என்பது மட்டும் உறுதி.!
பாவனா பாலகிருஷ்ணன் – இவரை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுத்து வழங்கும் VJ என்று மட்டும் தனித்து குறிப்பிட்டு சொல்லமுடியாது. தொகுப்பாளி, டான்சர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடுவது, ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம் என பன்முகத்தன்மை திறன் உடையவர்.
இவர் சமீபத்தில் வெளியான “வார்” படம் பார்த்துவிட்டு ட்விட்டரில் இவர் தட்டிய ரெவியூ பற்றி தான் நாம் பார்க்கப்போகிறோம்.
” ஆண்களுக்கு விறு விறு ஆக்ஷன், கார் சேசிங் மற்றும் ஹாலிவுட் போன்ற ஸ்டுயன்ட் காட்சிகளுக்காக படம் பிடிக்கும். பெண்களுக்கு படம் பிடிக்க இரண்டு முக்கிய காரணம் டைகர் ஷெராப் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் தான். அவ்வளவு அருமை. ஹ்ரித்திக் இன்னும் அதிக படங்கள் நடிக்க வேண்டும் மேலும் அவர் விந்தணு தானம் கூட செய்யவேண்டும். போய் படத்தை பாருங்கள்.” என ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். இது புதுவிதமான தானம் தான் பாவனா பாலகிருஷ்ணன்…..
சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவை நாங்கள் இளைஞர் குரலில் வெளியிட்டு இருக்கிறோம். “தப்பு எம்மேலதா – ஒத்துக்கறேன், மாத்திக்கறேன்”
இந்த வீடியோ பதிவு என்ன சொல்வது என்றால், இந்த நாட்டில் நடக்கும் தவறுகள் அனைத்திற்கும் நாம் தான், நான் தான், பொறுப்பு என்றவாறு செல்கிறது.
இந்த வீடியோ பதிவை ஆராய்ச்சி செய்து பார்த்தால் கண்மூடித்தனமாக ஆம் என்ற பதில் தான் வருகிறது.
தயவுசெய்து இந்த வீடியோவை பார்த்து அனைத்து மக்களும் நம்மளை தயார்படுத்திக் கொண்டால் நமது எதிர்காலம் சிறப்பாக அமையும் என நம்புவோமாக.
இப்படிக்கு – இளைஞர் குரல்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா புதிய உயர்வைப் பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும்(176, 127) சதம் அடித்ததையடுத்து, பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 17-வது இடத்துக்கு ரோஹித் சர்மா முன்னேறியுள்ளார்.
இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததையடுத்து தரவரிசையில் 38 இடங்கள் உயர்ந்து, 25-வது இடத்துக்கு முன்னேறியுல்ளார்.
கேப்டன் விராட் கோலி கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரிக்குப் பின் 900 புள்ளிகளுக்கு கீழ் குறைந்து தொடரந்து 2-வது இடத்தில் 899 புள்ளிகளுடன் நீடிக்கிறார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 937 புள்ளிகளுடன் உள்ளார்.
இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தியதையடுத்து பந்துவீச்சாளர்கள் டாப்10 வரிசையில் இடம் பிடித்து 10-வது இடத்தை அடைந்துள்ளார். இதற்கு முன் 14-வது இடத்தில் அஸ்வின் இருந்தார். ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் அஸ்வின் முதல் 5 இடங்களுக்குள் உள்ளார்
மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி 18-வது இடத்தில் இருந்து 16-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பந்துவீசசாளர் தரவரிசையில் 710 புள்ளிகளை ஷமி பெற்று இருப்பது இதுதான் முதல் முறையாகும்.
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவிந்திர ஜடேஜா 2-வது இடத்துக்கு உயர்ந்து, வங்கதேச வீரர் சகிப் அல்ஹசனை 3-வது இடத்துக்கு பின்தங்க வைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க வீரர் டீ காக் சதம் அடித்ததையடுத்து, பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்று 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். எல்கர் 5 இடங்கள் முன்னேறி 14-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.