Sunday , April 11 2021
Breaking News
Home / உலகம் (page 10)

உலகம்

உலகம்

கொரோனா வைரஸ் உலக அளவில் பலி 4,972 ஆக உயர்வு…

  1. பீய்ஜிங்: சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவிய ‘கொரோனா’ வைரஸ் உலகில் 123 நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 3,158 பலியான நிலையில் நேற்று ஒருவர் மட்டுமே பலியாகியுள்ளதால் நோய் பாதிப்பு நீங்கி பலி எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
    உலக அளவில் பலியானோர் எண்ணிக்கை 4,627 லிருந்து 4,972 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் 1,26,139 லிருந்து 1,34,559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே பலியானோர் எண்ணிக்கை 1,016 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 68,939 பேர் குணமடைந்துள்ளனர்.

கோரோன வைரஸ் – ஐயப்பபக்தர்கள் அனைவரும் வரவேண்டாம் என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு

ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் கொரானாவைரஸ் பரவும் அச்சம் கேரளாவில் அதிகம் உள்ள காரணத்தினால் இந்த மாதம் தமிழ் பங்குனி மாதம்பிறப்பிற்கு சபரிமலையில் சாஸ்தாவின் சன்னிதானம் 5 நாட்கள் நடை திறந்திருக்கும் பூஜைகள் எப்பொழுதும் போன்று நடைபெறும் ஆனால் பக்தர்களுக்கு மேலே செல்ல அனுமதி இல்லை ஆகையால் ஐயப்பபக்தர்கள் அனைவரும் வரவேண்டாம் என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம் போர்டு அறிவிக்கிறது.

(NPR)என்பிஆருக்கு எந்த ஆவணமும் கேட்கப்படாது.. பயப்பட வேண்டாம்.. அமித் ஷா முக்கிய அறிவிப்பு

என்பிஆருக்கு எந்த ஆவணமும் கேட்கப்படாது.. பயப்பட வேண்டாம்.. அமித் ஷா முக்கிய அறிவிப்பு

டெல்லி: என்பிஆர் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் எந்த ஆவணமும் கேட்கப்படாது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது உறுதி அளித்தார்.

குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஏ), மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது.

குறிப்பாக என்பிஆர் குறித்து அஸ்ஸாமில் கேட்கப்பட்ட ஆவணங்களாக தந்தையின் பிறந்த நாள் சான்றிதழ்கள் மற்றும் அவர்கள் இந்திய குடிமகன்கள் தானான என்பதை நிரூபிக்க கேட்கப்பபட்ட வாக்குரிமை ஆவணங்கள் உள்ளிட்டவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அத்துடன் பிறப்பு சான்றிதழ் இல்லை என்றால் முகாம்களில் அடைக்கப்படுவோமோ என்ற பயமும் பீதியும் பெரிய அளவில் பரவியதால் என்பிஆர் விவகாரம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்புக்கு வித்திட்டுள்ளது.

இதனால் என்பிஆர் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் வேகமாக பரவின. இந்த போராட்டம் இன்று வரை பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில் ராஜ்யசபாவில் காங்கிரஸ் மூத்த எம்பி கபில் சிபல் CAA NPR உடன் இணைந்தால் என்ன ஆகும் என என்பிஆர் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில் , NPR இன் போது எந்த ஆவணமும் கேட்கப்படாது. எந்த ஆவணங்களும் அளிக்க தேவையில்லை. எனவே யாரும் பயப்பட வேண்டாம். ஒருவர் குறிப்பிட்ட தகவல்களை வழங்க விரும்பவில்லை என்றால், எந்த கேள்வியும் கேட்கப்படமாட்டாது, சிஏஏ குறித்து முஸ்லீம் சகோதர சகோதரிகள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. என்பதை அவர்களிடம் நான் சொல்ல விரும்புகிறேன்” இவ்வாறு அமித் ஷா கூறினார்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ், இடதுசாரிகள் ஆளும் கேரளா, திரிணாமுல் ஆளும் வங்காளம் மற்றும் பாஜக கூட்டணி தலைவரான நிதீஷ்குமாரால் ஆளப்படும் பீகார் ஆகிய நாடுகளும் பல மாநிலங்கள் என்.பி.ஆர் பயிற்சியை மேற்கொள்ள மறுத்துவிட்டன. இதேபோல் தெலுங்கானா, ஆந்திராவும் என்பிஆரை அமல்படுத்த மறுத்துள்ளன. இந்நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவும் தமிழகமும் என்பிஆரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

தயாராக இருங்கள்.. கொரோனாவை பெருந்தொற்றுநோயாக அறிவித்தது உலக சுகாதார மையம்…

மிக முக்கிய அறிக்கை!

நியூயார்க்: கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் COVID19 நோய் தாக்குதலை பெருந்தொற்றுநோய் என்று உலக சுகாதார மையம் நேற்று அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் உலக நாடுகள் திணற தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க 123 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.உலகம் முழுக்க 119,177 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.உலகம் முழுக்க 4,295 கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

என்ன அறிக்கை
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார மையம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், கொரோனா வைரஸ் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். உலகம் முழுக்க இந்த வைரஸ் பரவும் வேகமும், அதன் தாக்கமும் அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் COVID19 நோய் தாக்குதலை பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்கிறோம், என்று கூறியுள்ளது.

எப்படி
இதை ஆங்கிலத்தில் Pandemic என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், Pandemic என்ற வார்த்தை சாதாரணமாக பயன்படுத்த கூடிய வார்த்தை கிடையாது. இது மிகவும் முக்கியமானது. இந்த வார்த்தையை தவறாக பயன்படுத்தினால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படும். மக்கள் இடையே இதனால் தேவையற்ற பயம் ஏற்படும்.

என்ன தீவிரம்
ஆனாலும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அதை பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்கிறோம். பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் கொரோன வைரசுக்கு எதிராக
கடுமையாக போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். உலக சுகாதார மையம் இதற்காக தொடர்ந்து தீவிரமாக செயல்படும்.

போர்க்கால முறை
உலகம் முழுக்க இருக்கும் எல்லாம் நாடுகளும் உடனே அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு போர்க்கால முறையில் செயல்பட வேண்டும். நோய் தாக்குதல் உள்ளவர்களை தனிமைப்படுத்தி, உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். நோய் தாக்குதல் பரவ வாய்ப்புள்ள எல்லோரையும் தனிமைப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளை எல்லோரும் தயார்படுத்த வேண்டும்.

மருத்துவ பணியாளர்கள்
உங்கள் நாட்டில் உள்ள மருத்துவ பணியாளர்களை இதற்காக பயிற்சி கொடுத்து தயார் படுத்துங்கள். நாம் எல்லோரும் இணைந்து பணியாற்ற இதுதான் சரியான நேரம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக ஒரு நோய் தாக்குதலை உலக சுகாதார மையம் பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்காது. உலகம் முழுக்க பரவினால் மட்டுமே இப்படி அறிவிக்கப்படும். தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன இது
pandemic அல்லது பெருந்தொற்றுநோய் என்பது ஒரு குறிப்பிட்ட நோய் ஒரு நாடு முழுக்க அல்லது உலகம் முழுக்க பரவினால் அதை குறிக்க பயன்படுத்தும் வார்த்தை ஆகும். கொரோனா வைரஸ் உலகம் முழுக்க 120+ நாடுகளில் பரவியதை அடுத்து, அதை pandemic அல்லது பெருந்தொற்றுநோய் என்று அறிவித்து இருக்கிறார்கள். ஒரு நோயின் வீரியம், பரவும் தன்மை, வேகம், பரவிய இடம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்படி அறிவிக்கப்படும் .

ஏன் கொரோனா
பொதுவாக ஒரு வைரஸ் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிகள் மூலம் பரவினால் அதை பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்க மாட்டார்கள். ஆனால் அதே நோய் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிகள் மூலம் பரவி, பின் அந்த நாட்டிற்கு உள்ளே இருக்கும் குடிமக்களிடமும் பரவினால் அதை பெருந்தொற்றுநோய் என்று அறிவிப்பார்கள். உள்நாட்டிற்குள் இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை இதில் கருத்தில் கொள்வார்கள்.

எப்படி பரவும்
பொதுவாக பெருந்தொற்றுநோய் என்று ஒரு நோய் அறிவிக்கப்பட்டால், அதை தீவிரமாக கண்காணிப்பார்கள். அதன் வேகம் அதிகரிக்கும் போதுதான் அதை பெருந்தொற்றுநோய் என்று அறிவிப்பார்கள். தற்போது கொரோனா வேகம் அதிகரித்துள்ளது. முன்பை விட 17 மடங்கு வேகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது. அதனால் கொரோனவை தற்போது பெருந்தொற்றுநோய் என்று உலக சுகாதார மையம் வரையறை செய்துள்ளது.

முடங்கிய ஐரோப்பா.. வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. 1,26,139 பேரை தாக்கிய கொரோனா.. கொடூரம்

முடங்கிய ஐரோப்பா.. வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. 1,26,139 பேரை தாக்கிய கொரோனா.. கொடூரம்

பெய்ஜிங்: உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 4,627 ஆக உயர்ந்துள்ளது.

டிசம்பர் மாதம் இறுதியில் திடீர் என்று சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. சீனா, ஜப்பான், இத்தாலி, ஈரான், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா என்று பல நாடுகளை இந்த வைரஸ் நிலைகுலைய வைத்துள்ளது.
கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவில் வுஹான் நகரத்தில் இந்த வைரஸ் உருவானது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் அவசர நிலை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. கர்நாடகா அரசு

எத்தனை பலி
உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 4,627 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139 ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 3,169ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,796ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கொஞ்சம் கொன்ஜமாக் வேகமாக குறைந்து வருகிறது.

சீனா
இந்த கொரோனா வைரஸால் சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலிதான் அதிகம் பாதிக்கப்பட்டடுள்ளது. இத்தாலியில் முதலில் இரண்டு நகரங்கள் இந்த வைரசால் மூடப்பட்டது. தற்போது மொத்தமாக இத்தாலி மூடப்பட்டது, அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்தாலியில் மொத்தம் 12,462 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.

ஈரான் வைரஸ்
அதற்கு அடுத்து ஈரானிலும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் 9,000 பேருக்கு வைரஸ் ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று மட்டும் 63 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். 354 பேர் இதுவரை ஈரானில் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்து தென் கொரியாவில் 7,869 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 66 பேர் அங்கு இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி உள்ளனர்.

அமெரிக்கா எப்படி
அமெரிக்காவில் 1,313 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 38 பேர் பலியாகி உள்ளனர். இதனால் வாஷிங்கடன் மொத்தமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் 2,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 48 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 2277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 55 பேர் பலியாகி உள்ளனர். ஐரோப்பாவில் இந்த வைரஸ் தற்போது வேகம் எடுத்து வருகிறது.

மொத்தம் எத்தனை
இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கி மொத்தம் 57 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முக்கியமாக தமிழகத்தில் வைரஸ் தாக்கிய நபர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார். கேரளாவில் 14 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. இதில் இரண்டு பேர் மோசமான நிலையில் இருக்கிறார்கள். கர்நாடகாவில் வைரஸ் தாக்கியதாக சந்தேகிக்கப்பட்ட முதியவர் நேற்று பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக காங்கிரஸ் தலைவராக டிகே சிவகுமார் நியமனம்…

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவருடன் மேலும் 3 செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூர்:
கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்த 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும், எதிர்க்கட்சி மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிகளை சித்தராமையாவும் ராஜினாமா செய்தார்கள்.
டெல்லி சட்டசபை தேர்தல், மாநில தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்கள் இடையே போட்டி, கருத்து வேறுபாடுகள் ஆகிய காரணங்களால் மாநில தலைவரை நியமிக்காமல் காங்கிரஸ் மேலிடம் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் 2 மாதத்திற்கும் மேலாக கர்நாடக மாநில காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டிகே சிவகுமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அத்துடன், செயல் தலைவர்களாக 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈஷ்வர் காண்ட்ரே, சதீஷ் ஜர்கிஹோலி, சலீம் அகமது ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல், டெல்லி முன்னாள் எம்.எல்.ஏ அனில் சவுத்ரி காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் முதல்வெற்றி: சீன அதிபர் நம்பிக்கை…

பீஜிங்: சீனாவின் ஹூபே

மாகாணத்திலுள்ளவுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால் உலகளவில், 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 1.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வருவதாக தகல்கள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் வகையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வுஹான் நகரில் நேற்று (மார்ச் 10) நேரில் ஆய்வு செய்தார்.


அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் கொரோனா வைரசின் தாக்கம், கட்டுப்படுத்தும் முறை மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக புத்துணர்வாக பேசினார். சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடமும், நர்ஸ்களிடமும் உற்சாகமாக பேசினார். இது தொடர்பான வீடியோ வெளியானது.

வர்த்தகமும்… போக்குவரத்தும்!

இந்நிலையில் அதிபர் ஜி ஜின்பிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்த, ஹூபே மாகாணத்தில், கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. வைரஸ் பரவலின் தீவிரத்தை மருத்துவர்கள் குறைந்துள்ளனர். இதனால், அங்கு புதிதாக யாரும் வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகவில்லை. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், இது முதல்கட்ட வெற்றி. இன்னும் ஓரிரு வாரங்களில், ஹூபே மாகாணத்தில், வர்த்தகமும் போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும்,” என்றார்.

‘வுஹானில் வர்த்தகமும் போக்குவரத்தும் சீராகும் என, அதிபர் அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு’ என, வுஹான் நகரில் சிக்கியுள்ளவர்களைத் தொடர்புகொள்ள முடியாத பலரும், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், வுஹானில் இயல்பு நிலை திரும்ப பல மாதங்களாகலாம் என்றும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது

 

ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்

இன்று (11.03.2020) இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கிடையூர் இணைந்து இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இரத்த தானத்தின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இதில் 64 மாணவ மாணவிகள் ரத்ததானம் வழங்கினர் பெறப்பட்ட இரத்தம் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் கலந்து கொண்ட இரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் ரமதரன் வட்டார மருத்துவ அலுவலர், டாக்டர் ரமேஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பஞ்சட்சரம், சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, கார்த்திக் குமார், வெங்கடாசலம் ஆகியோர்களுக்கு கல்லூரி நிறுவனர் டாக்டர் சுஜாதா அவர்கள் நன்றியை தெரிவித்தார்.

இதுக்கு மேலயும் உஷாராகவில்லையெனில்… காங். காலாவதியாகும்- எச்சரிக்கும் கட்சி தலைவர்கள்…

டெல்லி:

ஜோதிராதித்யா சிந்தியாவின் விலகலைத் தொடர்ந்து கட்சி தலைமை சரியான நடவடிக்கைகள் எடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் போகால் காங்கிரஸ் என்ற கட்சியே காணாமல் போகும் என்பது அக்கட்சி சீனியர்களின் கருத்து.

இந்தியாவின் மிகப் பழமையான காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத தள்ளாட்டத்தில் இருக்கிறார்கள் தலைவர்கள். இன்னமும் இடைக்கால தலைவரை வைத்துக் கொண்டு காங்கிரஸ் காலத்தை நகர்த்துகிறது.
கட்சியின் சீனியர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையே மோதல்கள் எழுவது இயல்புதான். ஆனால் ஆக்கப்பூர்வமான தலைமை இருந்தால் மட்டுமே இப்படியான பிரச்சனைகளை லாவகமாக கையாள முடியும். அப்படி கையாண்டிருந்தால் ஜோதிராதித்யா சிந்தியா போன்ற ஆளுமைகள் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கமாட்டார்கள்.

மாஜி முதல்வர்கள்
ஆகப் பெருமை வாய்ந்த காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாநிலத்திலும் தமது இருப்புக்கு தாமே வேட்டு வைத்துக் கொண்டுதான் வருகிறது. எந்த மாநிலத்தில்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்/ இளைய தலைமுறையினர் விலகாமல் இல்லை. உத்தர்காண்ட் முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணா, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, ஒடிஷா முன்னாள் முதல்வர் கிரிதர் கோமாங் எனும் பெருந்தலைகள் ஏற்கனவே ஒதுங்கிவிட்டனர்.

குட்பை சொன்ன மாஜி அமைச்சர்கள்
முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜிகே வாசன், ஜெயந்தி நடராஜன் (தமிழகம்), கிஷோர் சந்திரா தியோ (ஆந்திரா), எஸ்.எம். கிருஷ்ணா (கர்நாடகா), பேனி பிரசாத் வர்மா (உபி), ஶ்ரீகாந்த் ஜேனா (ஒடிஷா), சங்கர்சிங் வகேலா (குஜராத்) என காங்கிரஸில் இருந்து வெளியோரின் இன்னொரு பட்டியலும் இருக்கிறது. இவர்கள் அல்லாமல் மாநில தலைவர்களாக இருந்த அசோக் தன்வார் (ஹரியானா), ரீட்டா பகுகுணா ஜோஷி (உபி), போட்சா சத்யநாரயணா (ஆந்திரா), புவனேஸ்வர் கட்டா (அஸ்ஸாம்), யாஷ்பால் ஆர்யா (உத்தரகாண்ட்), அசோக் சவுத்ரி (பீகார்) ஆகியோரும் காங்கிரஸ் கட்சிக்கு குட்பை சொல்லிவிட்டனர்.

நீளும் விலகியோர் பட்டியல்
மேலும் அஸ்ஸாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அருணாச்சல பிரதேசத்தின் தற்போதைய முத்அல்வர் பேமா காண்டு, திரிபுராவின் சுதீப் ராய், மணிப்பூரின் பைரேன் சிங் என சீனியர்களும் ஏற்கனவே காங்கிரஸை கை கழுவிவிட்டனர். ஹரியானாவின் சவுத்ரி பைரேந்தர் சிங், தெலுங்கானா சீனிவாஸ், மேற்கு வங்கத்தின் மனாஸ் புனியா, கோவாவின் விஸ்வஜித் ராணே, மகாராஷ்டிராவின் நாராயண் ராணே என காங்கிரஸில் இருந்து வெளியேறியவர்கள் பட்டியல் பெரும் நீளமானது. ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒய்.எஸ்.ஆர்., தெலுங்குதேசம், பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர். இப்போது காங்கிரஸில் விரல் விட்டு எண்ணக்கூடிய சீனியர்கள் இருக்கின்றனர்.

தீர்வு காணும் தருணம்
ஆகையால் இளையதலைமுறைக்கு வாய்ப்பு கொடுத்து தற்போதைய அரசியல் சூழ்ல்நிலைகளுக்கு உடனடியாக ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டிய தலைமைதான் காங்கிரஸுக்கு தேவை. ஆனால் இன்னமும் இடைக்கால தலைவரை நம்பிக் கொண்டு ஒருபுறம்.. எப்போது எந்த தேசத்தில் இருப்பார் என தெரியாத ராகுல் போன்ற மாஜி தலைவர்கள் இன்னொரு பக்கம்.. என காணாமல் போய்க் கொண்டிருந்தால் கட்சி மட்டும் இருக்கவா செய்யும்? எங்கே எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அதிகாரத்தை அபகரித்துவிடுவதில் உறுதியாக இருக்கும் பாஜகவுக்கு காங்கிரஸ் மேலிடம்தான் செங்கம்பள வரவேற்பு கொடுக்கிறது என்பதும் மிகையல்ல.

இப்போதாவது விழித்தல் அவசியம்
இதனால்தான் ஜோதிராதித்யா சிந்தியாவின் விலகலை முன்வைத்தாவது கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்; நிரந்தரமான தலைவரை நியமிக்க வேண்டும் என்ற குமுறல்கள் காங்கிரஸில் வெளிப்படுகின்றன. இல்லையெனில் இடதுசாரிகள் எப்படி நாடாளுமன்றத்தில் சிங்கிள் டிஜிட்டுக்கு தள்ளப்பட்டார்களோ அதைவிட மோசமான ஒருநிலைக்கு காங்கிரஸ் போய்விடும் என்பது நிதர்சனம் என அக்கட்சித் தலைவர்களே குமுறுகின்றனர்.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…

சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை கணிசமாக  குறைத்தது போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  இதனால், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
அந்த வகையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.73.02 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.66.48ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by