Wednesday , July 15 2020
Breaking News
Home / உலகம்

உலகம்

உலகம்

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்

பொது மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

“கொரோனா” தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை சித்த மரு திரு.வீரபபாபு தலைமையில் மிக சிறப்பாக செயல்படுத்தி
வருகிறார்.

1.கட்டணம் : இல்லை (இலவசம்)

2.காலம்:5-7 நாட்கள்.

3.சேர தேவையானவை : கொரோனா
பாசிட்டிவ் என வந்த SMS அல்லது மெடிக்கல் ரிப்போர்ட், ஆதார் அட்டை.

 1. படுக்கை வசதி : 300.
 2. சிகிச்சை : மூலிகை தேனீர், கபசுரக் குடிநீர், மூச்சுப்பயிற்சி போன்ற சிகிச்சைகள்.
 3. உணவு : காலை டிபன், மதியம் சாப்பாடு, தோரம் பருப்பு,சாம்பார், வத்தக்குழம்பு, மிளகு ரசம், மாலை கொண்டகடலை சுண்டல், இரவு டிபன்,
 4. இறப்பு விகிதம் : 0%
 5. சுகாதாரம் : 100%

நோயாளிகள் உயர்தரமான சிகிச்சைகளும், உயர்தரமான உணவுகளும் , ஆரோக்கியமான உடல் பயிற்சிகளும் பெற்று “கொரோனா” தொற்று இல்லாமல் குணமாகி வருகின்றனர்.

மக்களே! இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முகவரி:
Dr.veerababu,
Jawahar engineering college,
No.54, Kalaignar St, Kaveri Rangan nagar, Saligramam, Chennai, Tamil Nadu 600093
தொடர்பு எண் -விவேக் 9551241624

ஆய்வாளர்கள் தகவல்!!”600 கோடி” கிரகங்கள் உள்ளன!

பூமியை போன்று 600 கோடி கிரகங்கள் பால்வழி மண்டலத்தில் உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

லண்டன்,

நமது சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் வாழ கூடிய தகவமைப்புகளை கொண்ட ஒரு கிரகம் நாம் வாழுகின்ற பூமி. பூமியை போன்று அண்டவெளியில் வேறு கிரகங்களும் இருப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பூமி போல் வேறு கிரகம் இருக்க வேண்டுமெனில், அது, கடினமுடன், பூமி அளவு உருவத்துடன் மற்றும் சூரியன் போன்ற நட்சத்திரங்களை சுற்றி வருவதுடன், தன்னுடைய நட்சத்திரத்தின் வாழ்விட மண்டலங்களுக்கு உள்ளேயே வட்ட பாதையில் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் ஆகும்.

இதுபற்றி பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களில் ஒருவரான ஜேமி மேத்.

Thanks To: Akni Sena

78.55 லட்சத்தை தாண்டியது..!

COVID-19 Coronavirus Greatest Danger on a World Map on a digital LCD Display Map source: https://www.nasa.gov

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 78.55 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 31 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 40.22 லட்சத்தை கடந்துள்ளது.

Thanks to maalaimalar

இரண்டாம் இடத்தில் பிரேசில்..!

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி உலகில் 76 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறைந்தது 424,000 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பிரேசிலின் கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று இங்கிலாந்தை முந்தியது, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளனான உலகின் இரண்டாவது நாடாக பிரேசில் உள்ளது. சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் மொத்தம் 828,810 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, கடந்த 24 மணி நேரத்தில் 25,982 புதிய தொற்றுநோய்களும், மேலும் 909 இறப்புகளும் இறப்புகளும் பதிவாகி உள்ளது அங்கு மொத்த இறப்பு எண்ணிக்கை 41,828 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்புகளில் இருந்து 365,063 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Thanks : dailythanthi

டிரம்புக்கு எதிராக திரும்பிய.. காலின் பாவெல்..

நியூயார்க்: ஏகப்பட்ட கனவில் மூழ்கி திளைத்து வந்தார் அதிபர் டிரம்பின்.. அந்த அத்தனை ஆசைகளிலும் மண் விழுந்து வருகிறது.. வரக்கூடிய அதிபர் தேர்தலில் டிரம்புக்கு வாக்களிக்க போவதில்லை என குடியரசு கட்சியைச் சேர்ந்த காலின் பாவெல் அறிவித்துள்ளார். இதனால் டிரம்புக்கு டென்ஷன் எகிறி உள்ளது! அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.. இதற்குதான் பல வகைகளில் தன்னை தயார் படுத்தி வந்தார் டிரம்ப்.. திரும்பவும் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கனவில் இருந்து வருகிறார்.

இந்த சமயத்தில்தான் கொரோனா நுழைந்தது.. ஆரம்பத்தில் அந்த வைரஸை கண்டுகொள்ளவே இல்லை.. கொரோனாவைரஸை தடுக்க இவர் சரிாயான நடவடிக்கை எடுக்கவில்லை. அலட்சியம் காட்டினார். இதனால் அமெரிக்காவில் மிகப் பெரிய உயிரிழப்பு ஏற்பட்டது. மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். கொத்து கொத்தாக பலர் மடிவதை பார்த்தபோதுதான் அதிபருக்கு நாளடைவில்தான் லேசாக அடிவயிற்றில் பீதி கிளம்பியது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த தேர்தல் நடைபெறுமா என்பதில் சந்தேகமாக இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என்று டிரம்ப் பிடிவாதமாக சொல்லிவிட்டார். எத்தனை பேர் இறந்தாலும், பொருளாதாரம் அதல பாதாளத்தில் தொங்கினாலும், தான்தான் அடுத்த அதிபர் என்பதில் படு உறுதியாக இருக்கிறார். வைரஸ் பரவல் இன்னும் அதிகமாகும் என்று எச்சரிக்கப்பட்டும்கூட, லாக்டவுனை தளர்த்துவதிலேயே அவர் குறியாக இருந்து வருகிறார். இந்த சமயத்தில்தான், கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொலை விவகாரம் வெடித்தது.. ஒரு கொலை, உள்நாட்டு போராக வெடிக்கும் என்பது மட்டுமல்ல, உலகம் தழுவிய நிறவெறி, இனவெறிக்கு எதிராக இப்படி திரண்டு வந்து நிற்கும் என்று அதிபர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. புரட்சிகளும், போராட்டங்களும் வெடிப்பதை பார்த்து மலங்க மலங்க விழித்து கொண்டிருக்கிறார்.

என்னென்னவோ மிரட்டல் விடுத்து பார்க்கிறார்.. சொந்த நாட்டில் ஒருத்தரும் இவர் பேச்சை கேட்கவில்லை.. கொரோனா உயிரிழப்பு & ஜார்ஜ் கொலை இரண்டுமே டிரம்ப்பின் அதிபர் கனவை நொறுக்கி கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் எல்லாம் அதிபருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், இப்போது இன்னொரு ஷாக் டிரம்புக்கு தரப்பட்டுள்ளது.. அந்த ஷாக் முக்கியமான கட்சியில் இருந்தே டிரம்புக்கு வந்ததுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

குடியரசு கட்சியைச் சேர்ந்த காலின் பாவெல் சிஎன்என் மீடியாவுக்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், “போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை அழைப்பேன் என்று சொல்லி இருக்க கூடாது.. அது தவறானதும்கூட.. இந்த நாட்டில் ஒரு அரசியலமைப்பு இருக்கிறது… அந்த அரசியலமைப்பை அனைவரும் பின்பற்ற வேண்டியது நம் கடமை.. ஆனால் அதிபர் மட்டும் அதிலிருந்து வேறு பாதைக்கு செல்கிறார்.. திசை மாறி போகிறார்.. அவரது பேச்சு, அமெரிக்க ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த வருஷம் நடக்க போகும் அதிபர் தேர்தலில் நான் டிரம்பை ஆதரிக்க முடியாது.. கண்டிப்பாக முடியாது.. நான் சமூகம் தொடர்பான விஷயத்திலும், அரசியல் தொடர்பான விஷயத்திலும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனுடன் இணக்கமாக இருக்கிறேன்.. எங்கள் நெருக்கம் அதிகமாக இருக்கிறது.. காரணம், நானும் அவரும் 35-40 வருஷமாக ஒன்றாக பணிபுரிந்து வருகிறோம்… வரப்போகும் தேர்தலில் அவர் அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட போகிறார்.. அதனால் நான் அவருக்குதான் வாக்களிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். காலின் பாவெல் முன்னாள் உள்துறை அமைச்சரும் கூட. 83 வயதாகிறது.. அமெரிக்க ராணுவத்தில் முன்னணி பொறுப்பிலிருந்தார்.. அதற்கு பிறகுதான் குடியரசு கட்சியில் இணைந்தார்.. சென்ற முறையே அதாவது 2016-ம் ஆண்டுகூட அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு இவர் வாக்களிக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

ஆக மொத்தம் பார்த்தால் டிரம்புக்கு அவரை சுற்றிலுமே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.. அவரது 2வது மனைவி, மகளே எதிர்ப்பு காட்டுகிறார்கள்.. போலீஸ் கமிஷனரே டிரம்பை “வாயை மூடுங்கள்” என்று எச்சரிக்கிறார்.. நம்பிக்கைக்குரிய பாவெல்லும் ஓட்டு போட மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.. அதிபருக்கு எதிரி வெளியாட்கள் இல்லை.. தன்னை சுற்றிலும் உள்ளவர்களே.. இதெல்லாம் பார்த்தால் டிரம்பின் கனவு தகர்ந்து வருவதுபோலவே கண்ணுக்கு தெரிகிறது. மொத்தத்தில் டிரம்ப் வாய்க்கு.. வாஸ்து இப்போ சரியாக இல்லை..!

Thanks To: One india tamil

கொரோனா வைரஸ் தொற்று பரவலில் நடந்தது என்ன?-சீனா விளக்கம்

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை சீனா வெளியிட்டு, தன் பக்கம் எந்த தவறும் இல்லை என்று காட்டிக்கொள்ள முயற்சித்து இருக்கிறது.

ஆயிற்று, 6 மாதங்கள்!

சீனா இப்போதுதான் கண் விழித்திருக்கிறது. பின்னே?

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதன் முதலாக வுகான் நகரில் தென்பட்டதாகத்தான் தகவல்கள் இதுவரை வெளிவந்தன.

இப்போது 6 மாத காலத்தில் அந்த கொலைகார வைரஸ் தொற்று, பூமிப்பந்து முழுக்க கிட்டத்தட்ட ஆக்கிரமித்து விட்டது. 69 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று உலகமெங்கும் ஏற்பட்டிருக்கிறது. மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், 4 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள்.

பிற எந்த நாட்டையும் விட வல்லரசு நாடான அமெரிக்காவை இந்த வைரஸ் பாடாய்படுத்தி இருக்கிறது. 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு அங்கே இந்த தொற்று பாதித்து இருக்கிறது. ஏறத்தாழ 1 லட்சத்து 10 ஆயிரம் உயிர்களை அங்கு கொரோனா பலி வாங்கி இருக்கிறது. இந்தியாவிலும் கூட இந்த நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 2½ லட்சத்தை எட்டுகிறது. உயிர்ப்பலியும் 7 ஆயிரத்தை நெருங்குகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பற்றி உண்மை தகவல்களை சீனா உடனே வெளியிடாமல் மூடி மறைத்ததால்தான் உலக நாடுகள் எல்லாம் கொடிய விலை கொடுத்து கொண்டிருக்கின்றன என்று அமெரிக்கா இன்றளவும் குற்றம் சுமத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை சீனா தனது நாட்டுக்குள் கட்டுப்படுத்தி இருக்க முடியும், ஆனால் அதை அந்த நாடு செய்யவில்லை என்பதுதான் அமெரிக்காவுக்கு அந்த நாட்டின் மீது தீராக்கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அது மட்டுமல்ல, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமெரிக்கா தொடங்கி அத்தனை நாடுகளும் நீண்டதொரு பொது முடக்கத்தை அமல்படுத்தியதால் கோடிக்கணக்கானோருக்கு வேலை இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. உலக நாடுகளின் பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து விட்டது. அடுத்து நடக்கப்போவது என்ன என்று கணிக்க முடியாத நிலையில் நாடுகள் அனைத்தும் கதி கலங்கிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கி 6 மாதங்கள் ஓடிவிட்டன. இப்போதுதான் சீனா தனது நீண்ட மவுனத்தை கலைத்துக்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை அந்த நாடு வெளியிட்டு, தன் பக்கம் எந்த தவறும் இல்லை என்று காட்டிக்கொள்ள முயற்சித்து இருக்கிறது. அது நீண்டதொரு விளக்கமாக அமைந்து இருக்கிறது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்த்தோமானால்-

 • கொரோனா வைரஸ் முதன்முதலாக வுகானில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கண்டறியப்பட்ட நாள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி ஆகும்.
 • நோயாளிகளின் உடல் நிலை மற்றும் மருத்துவ விளைவுகளை பகுப்பாய்வு செய்து, அந்த கண்டுபிடிப்புகள் பற்றி ஆராய்வதற்கு உள்ளூர் அரசால் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தொற்றுநோயியல் நிபுணர்கள், இது வைரஸ் நிமோனியா என கூறினர்.
 • தேசிய சுகாதார கமிஷன் ஏற்பாடு செய்த உயர் மட்ட அளவிலான நிபுணர்கள், இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒன்று என்பதை முதன் முதலாக ஜனவரி 19-ந் தேதி உறுதி செய்தனர். இந்த நாளுக்கு முன்பாக இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சீன முன்னணி சுவாச நிபுணர் வாங் குவாங்பா தெரிவித்தார்.

ஜனவரி மாத தொடக்கத்தில் தேசிய சுகாதார கமிஷனால் வுகானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிபுணர்களில் வாங் குவாங்பா ஒருவர். வுகானுக்கு நிபுணர்கள் சென்றிறங்கிய போது காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. மேலும் வைரஸ் முதன் முதலாக வெளிப்பட்டதாக கூறப்படக்கூடிய வுகான் விலங்குகள் சந்தைக்கும், இவர்களுக்கும் நேரடி வெளிப்பாடு இல்லை என கண்டறிந்தனர். மேலும் வவ்வால்கள் மற்றும் எறும்புதின்னிகள் வைரசின் பரிமாற்ற ஆதாரங்களாக இருக்கலாம் என சந்தேகித்தனர். ஆனால் அதற்கும் போதுமான ஆதாரம் இல்லை என்பது வாங் குவாங்பா கருத்து. அதன்பிறகு, இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து சக மனிதர்களுக்கு பரவுமா என்பதை அறிவிக்க அறிவியலாளர்களுக்கு விடப்பட்டது. ஏனெனில் இதில் ஒரு தவறு நேர்ந்தால் அது கற்பனை செய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

இந்த நிலையில் ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு எடுக்கும் அமைப்பான உலக சுகாதார சபையானது, கொரோனா வைரஸ் தோற்றம் தொடர்பாக விசாரணை நடத்துவது தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு சீனாவும் ஆதரவு அளித்தது.

 • ஜனவரி 14-ந் தேதி, வுகான் மற்றும் அந்த நகரம் அடங்கிய ஹூபெய் மாகாணமும் வைரசை சந்திக்க ஆயத்தமாக இருப்பதை அதிகரிக்க வேண்டும் என்று தேசிய சுகாதார கமிஷன் அறிவுறுத்தியது. ஏனென்றால், அப்போது பெரிய அளவில் நிச்சயமற்ற நிலைகள் இருந்தன. மேலும் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுவதற்கான திறனும், வழிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியது.
 • சீனாவின் முன்னணி சுவாச நோய் நிபுணரான ஜாங் நன்ஷான், கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என்று ஜனவரி 20-ந் தேதி உறுதி செய்தார். அந்த நேரத்தில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 2 கேஸ்கள் இதை உறுதி செய்தன.

சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் காவ் பூ, ஏப்ரல் மாதம் சிஜிடிஎன் டி.வி.க்கு அளித்த பேட்டியில், ஜனவரி 19-ந் தேதி நடந்த ஒரு கூட்டத்தில் நிபுணர்கள் இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதித்தனர். உகானில் பாதிப்பு அடையாளம் காணப்பட்ட உடன் சீனா பரவலை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

 • சரியான நேரத்தில் சீனா, உலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும், வைரஸ் பரவும் நிலவரம் குறித்து தெரியப்படுத்தப்பட்டது. வைரசின் மரபணு வரிசையும் வெளியிடப்பட்டது.
 • வுகானில் சமூக பரவல் மற்றும் கொத்து கொத்தாக பாதிப்பு வந்த பின்னர் சீனாவின் பிற பிராந்தியங்களிலும் வைரஸ் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டது. வுகானில் இருந்து அங்கு சென்றவர்களால்தான் இந்த வைரஸ் பரவியது. அதைத் தொடர்ந்து நாடளாவிய தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்டம் தொடங்கப்பட்டது.
 • இந்த வைரஸ் அறியப்படாத நிமோனியா என அடையாளம் காணப்பட்ட பின்னர் ஜனவரி 3-ந்தேதி முதல் சீனாவின் சுகாதார அமைப்புகள் ஒரு நாள் கழித்து, உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்காவுக்கு மேலதிக விவரங்களை தெரிவிக்க தொடங்கின.

சர்வதேச சமூகம், இந்த வைரசுக்கு எதிராக ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஒற்றுமை என்றால் வலிமை. இந்த போரில் உலகம் வெல்லும்.

இவ்வாறு வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது உலக சுகாதார நிறுவனம், பொதுவெளியில் புகழ்ந்துரைத்தாலும்கூட, உரிய நேரத்தில் சீனா தகவல்கள் தராததால் உலக சுகாதார நிறுவனம் ஏமாற்றம் அடைந்து விரக்தியை சந்தித்தது என்று சமீபத்தில் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில்தான் சீனா இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதை உலக நாடுகள் ஏற்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Thanks To: Malaimalar

டாடா ஸ்கையின் “பகீர்” அறிவிப்பு!ஜூன் 15-க்கு பின் சில சேனல்கள் நீக்கப்படும்

சுமார் 70 லட்சம் பயனர்களுக்கான மாதாந்திர பில்களைக் குறைக்க டாடா ஸ்கை ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது!

வாடிக்கையாளர்களை மீண்டும் பெறுவதற்கான ஒரு நடவடிக்கையாக, டாடா ஸ்கை நிறுவனம் கிட்டத்தட்ட 70 லட்சம் (அதாவது 7 மில்லியன்) சந்தாதாரர்களுக்கான மாதாந்திர கட்டணங்களை குறைக்க அதன் சேவையில் இருந்து சில சேனல்களை நீக்க முடிவு செய்துள்ளது.

ஏனென்றால், இந்தியாவின் மிகவும் பிரபலமான டி.டி.எச் ஆபரேட்டர் ஆன டாடா ஸ்கை, கடந்த 60 நாட்களில் அதிக விலை காரணமாக 15 லட்சம் (அதாவது 1.5 மில்லியன்) சந்தாதாரர்களை இழந்துள்ளது.

Thanks To: Samayam News

கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு இன்று பிறந்தநாள்…

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே தனது 32ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

கிட்டத்தட்ட 9 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடும் அஜிங்கியா ரஹானே 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளில் ரஹானே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தற்போது வரை இவர் இந்திய அணிக்காக 65 டெஸ்ட் போட்டிகளிலும், 90 ஒருநாள் போட்டிகளிலும், 20 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். ஒருசில ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

உலக சுற்றுசூழல் தின நல்வாழ்த்துக்கள்…

நமது சுற்றுசூழலை பாதுகாப்பதே நாம் நம் உலகை காக்க நம் செய்யும் தலையாய கடமை ஆகும். நாம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது. மரம் வளர்த்து மழை பெறுவது. உயிர்வளியை காப்பது நமது கடமையாகும்.

இளைஞர்குரல் இணையவழி பத்திரிக்கையின் இனிய சுற்றுசூழல் தின நல்வாழ்த்துக்கள்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பாவா நகர் 1 ல் தார்ச்சாலை அமைக்கும் பணி…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பாவா நகரைச் சுற்றி வர தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த செயல் திறம்பட பாவா நகருக்கு கொண்டு வந்த பெருமை பாவா நகர் மக்களுக்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கும் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று பாவா நகருக்கு சாலை அமைக்கும் பணியை விரைவில் கொண்டு வந்தமைக்கு தமிழக அரசுக்கும் மற்றும் அரவக்குறிச்சி பஞ்சாயத்து அதிகாரிகளுக்கும் இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

NKBB TECHNOLOGIES
Open chat
Powered by