Wednesday , January 20 2021
Breaking News
Home / Veetri Rajkumar (page 2)

Veetri Rajkumar

கோழிகள் திடீரென மரணமடைந்தால் இந்த எண்ணுக்கு உடனே தெரிவிக்க அறிவுறுத்தல்…

பறவைக் காய்ச்சல் தடுப்பு பணிக்காக 1061 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் பரவலை தொடர்ந்து, தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கேரள மாநில எல்லையில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களின் எல்லையில் 26 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், …

Read More »

ராமதாஸை இழுக்கும் டிடிவி தினகரன்..

அமமுக டிடிவி தினகரன் பாமவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலைப் பொறுத்தவரை எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுவும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் எந்த கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும், யார் யாருக்கு எதிரியாக, நண்பராக மாறுவார்கள் என்பதை முற்றிலும் கணித்துவிட முடியாது. அந்த வகையில் தமிழக தேர்தல் களத்தில் பாமக – அமமுகவை முன் வைத்து ஒரு தகவல் கூறப்படுகிறது. சசிகலா விடுதலைக்குப் பிறகு …

Read More »

பொங்கல் பரிசு கொடுக்க வைத்திருந்த ரூ.5 லட்சம் வழிப்பறி…

சென்னை கோயம்பேட்டில் பொது மக்களுக்கு வழங்குவதற்காக ரேஷன் கடை ஊழியர் வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு சாஸ்திரி நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பணியாற்றி வருபவர் பாஸ்கர். இவர் நேற்று இரவு தனது பணியை முடித்துவிட்டு ரேஷன் கடையில் பொங்கலுக்காக கொடுக்க வைத்திருந்த ரூபாய் 8 லட்சம் பணத்தை தனது பையில் எடுத்துக்கொண்டு, அதே ரேஷன் கடையில் பணியாற்றக்கூடிய தனது நண்பர் சக்திவேல் உடன் …

Read More »

திருச்சி, கரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை !!

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், …

Read More »

சரியும் முட்டை கொள்முதல் விலை..

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசு குறைக்கப்பட்டுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கேரளா மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சலால் மக்களிடையே ஒருவித தயக்கம் காணப்படுவதால் முட்டை விலையை சற்று குறைக்கலாம் என பண்ணையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனை ஏற்று 25 பைசா குறைக்கப்பட்டது. ஏற்கெனவே 5 ரூபாய் 10 காசுகளாக …

Read More »

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் ..

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கடலூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னை, புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் நாளை அநேக இடங்களில் மிதமான …

Read More »

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி – தமிழக அரசு !!

திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்குமாறு நடிகர் விஜய் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் சினிமாவை மட்டுமே நம்பியிருந்தவர்களின் வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.  சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நவம்பர் 10-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டு 50 …

Read More »

தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தலா?

கொரோனா பரவல் காரணமாக கூடுதலாக 30 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன் காரணமாக தேர்தல் பணிகளில் வழக்கமாக 3 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தபடும் நிலையில் வரும் தேர்தலில் நான்கு லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவை தேர்தலை இரண்டு கட்டமாக நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.  தமிழகம், புதுவை, …

Read More »

மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் ; ஸ்டாலின் குற்றச்சாட்டு!

வருடத்திற்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக தவறான வாக்குறுதிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த, பாஜக அரசுக்கு அதிமுக அரசு அடிபணிந்து செயல்படுவதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார். மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என தெரிந்ததாலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் உள்ள அமைச்சர்கள், வரும் வரை லாபம் என அதிகளவில் ஊழல் செய்வதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருவாரூர் மாவட்ட, நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற, திமுக சார்பிலான …

Read More »

10 நாள்களுக்கு நிகழ்ச்சி நடத்த தடை!!

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர தனியார் ஓட்டலில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கு நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் இருந்த கொரோனா பாதிப்பு தீவிரம் தற்போது குறைந்துள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 1000-க்கும் குறைவானர்களுக்கே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இருப்பினும், பிரிட்டனில் பரவிவரும் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்காக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by