Monday , January 25 2021
Breaking News
Home / Veetri Rajkumar

Veetri Rajkumar

பறவைக் காய்ச்சல் எதிரொலியால் சரியும் கறிக்கோழி, முட்டை விலை..

பறவைக் காய்ச்சல் அச்சத்தால் பல்லடத்தில் கறிக்கோழி விலை கடந்த 4 நாட்களில் கிலோவுக்கு 21 ரூபாய் குறைந்துள்ளது. நாமக்கல்லில் முட்டை விலை 20 காசு சரிந்துள்ளது. பறவைக் காய்ச்சல் அச்சத்தால் பல்லடத்தில் கறிக்கோழி விலை கடந்த 4 நாட்களில் கிலோவுக்கு 21 ரூபாய் குறைந்துள்ளது. நாமக்கல்லில் முட்டை விலை 20 காசு சரிந்துள்ளது. பறவைக் காய்ச்சல் அச்சம் மற்றும் விற்பனை மந்தம் போன்ற காரணங்களால் பல்லடத்தில் கறிக்கோழி விலை தொடர்ந்து …

Read More »

சசிகலா தானாக உணவு உட்கொள்கிறார்; உடல்நிலையில் முன்னேற்றம்…

சசிகலா தானாக உணவு உட்கொள்கிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தண்டனை காலம் முடிந்து இம்மாதம் 27-ம் தேதி விடுதலையாக உள்ளார். கடந்த ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்த நிலையில் அவருக்கு புதன்கிழமை மாலை 3 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஏற்கனவே சர்க்கரை, தைராய்டு …

Read More »

இலங்கை கடற்படையினரால் 4 மீனவர்கள் உயிரிழப்பு !!!

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில், மீனவர்களின் படகு மூழ்கியதாக சக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில், கடலில் மூழ்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியான், உச்சிப்புளியைச் சேர்ந்த நாகராஜ், சாம்சன், செந்தில்குமார் ஆகியோர் கடந்த 18ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை …

Read More »

பெண்களை அவதூறாக பேசிய உதயநிதியை மு.க.ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்?

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி தனது குடும்பத்தினருக்கு பதவி பெறுவதற்காக மட்டுமே டெல்லி சென்று வந்ததாக விமர்சித்தார். பெண்கள் குறித்து அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலினை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டிக்க தவறியது ஏன் ? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஒரு கட்சியே அல்ல கம்பெனி என கடுமையாக …

Read More »

நாடு முழுவதும் நேற்று மட்டும் 1.48 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது…

தமிழகத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும் ஒரு லட்சத்து 48,000 பேருக்கு நேற்று, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள், கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், நாடு முழுவதும் நேற்று மட்டும் 1.48 லட்சம்  பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவித்தனர். தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த …

Read More »

தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு – முதலமைச்சர்..

தமிழகத்தில் வீடில்லாத ஏழை மக்கள் அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டித்தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 104-ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை அசோக் நகரில் அக்கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மேயராக இருந்த போது எந்தவொரு பணியையும் செய்யாமல், தற்போது …

Read More »

பழைய பாஸ் இருந்தால் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்..

சீருடை, பழைய பாஸ் இருந்தால் பள்ளி மாணவர்கள் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், மாணவர்கள் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மின்சார …

Read More »

அரசு கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு எச்சரிக்கை…

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் நபர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் குறைகளை பதிவேற்றக்கூடாது. அரசு கல்லூரிகளில் பணிபுரியும் நபர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் குறைகளை பதிவேற்றக்கூடாது என்றும், மீறினால் சைபர் கிரைம் நடவடிக்கை பாயும் எனவும் கல்லூரி கல்வி இணை இயக்குநர் ராமலட்சுமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து அரசு கல்லூரிகள் மற்றும் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரி மண்டல அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் …

Read More »

விஜய் சேதுபதி… ஜோடியாகும் கத்ரினா கைஃப்?

விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் அமீர் கான் …

Read More »

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by