Thursday , August 13 2020
Breaking News
Home / Admin

Admin

கருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர்…

Balamurugan R from Jallipatty Village, Karur District. செல். 9344224247 கருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர். நோயாளியின் பெயர் திரு. பாலமுருகன் ஆர்.அவர் கல்லீரல் நோய்கள் மற்றும் மாற்று சிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் சொல்கிறார்கள், மிகவும் அவசரமாக அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இல்லையென்றால் அது அவருக்கு பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும். அவர் …

Read More »

அன்னம் அறக்கட்டளையின் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம் என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா

அன்னம் அறக்கட்டளையின் அடுத்தகட்ட முயற்சியாக இயற்கை பாதுகாப்பு எனும் அமைப்பின் மூலமாக ( வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் அதைப் பேணி பாதுகாப்போம்என்னும் உறுதி மொழியோடு மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா நடைபெற்றது. அதை நம் பொள்ளாச்சி மேற்கு காவல் ஆய்வாளர் உயர்திரு வைரம் சார் அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் மற்ற காவல்துறை நண்பர்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எங்கள் அன்னம் அறக்கட்டளையின் நிர்வாகி, மற்றும் உறுப்பினர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை …

Read More »

இந்திய பாஜக அரசே! உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு! பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு! – மே பதினேழு இயக்கம்

இந்திய பாஜக அரசே! உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு! பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு! – மே பதினேழு இயக்கம் பார்ப்பனரல்லாத, பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட-பட்டியலின ஏழை-எளிய மாணவர்களின், தேசிய இன மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் புதிய கல்விக் கொள்கையை, கடும் எதிர்ப்புகளைத் தாண்டி கொரோனா என்ற பேரிடர் காலத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்துள்ளது மக்கள் விரோத பாஜக அரசு. இன்னும் சொல்லப்போனால், புதிய …

Read More »

கரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமையும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார். குளித்தலை புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்துவரும் தமிழக அரசுக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கும் கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்கும் என்றும், ஒரு சில தனிநபர்களும் அரசியல்வாதிகளும் பேருந்து நிலையம் வர கூடாது என சில குழப்ப செயல்களை …

Read More »

கொரோனா – வரமா, சாபமா

Nanda Third Eye கொரோனா – வரமா, சாபமா July 24, 2020 நம் மனித சமுதாயம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் நிகழ்வை தற்சமயம் சந்தித்துக் கொண்டுள்ளது. ஆம், கொரோனா என்ற ஒரு கொடிய நோய் உலக மக்கள் அனைவரையும் மிகவும் அச்சுறுத்திக்கொண்டுள்ளது. மாபெரும் பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ள முதற்கட்ட நாடுகள் முதல் உலகின் மூன்றாம் நிலை நாடுகள் வரை அனைத்தும் கண் பிதுங்கி நிலைகுலைந்து என்ன செய்வதென அறியாமல் திண்டாடிக்கொண்டுள்ளன. இதுவரை நம் மனிதகுலம் கால வரையறையை BC, AD அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, கிறிஸ்துக்கு பின்பு என வரையறுத்தது. ஆனால் தற்போது அதே BC, AC என்ற காலக்குறியீடு கொரானாவுக்கு முன், கொரானாவுக்கு பின் என்ற மாற்றி அமைக்கப்படவேண்டிய அளவுக்கு இவ்வுலகம் கொரோனாவின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எவ்வளவு பலம் பொருந்திய மனிதராயினும் பலமற்ற மனிதராயினும், எவ்வளவு புகழ் பெற்ற மனிதராயினும் சாதாரண மனிதராயினும், எவ்வளவு பொருள் படைத்த மனிதாராயினும் பொருளற்ற மனிதராயினும், எச்சாதி   மனிதராயினும், எம்மதத்தை சார்த்தவராயினும், எந்நாட்டை சார்ந்தவராயினும்,  எம்மொழி பேசுபவராயினும் கொரோனாவின் முன் அனைவரும் சமமே. சாதரணமாக நாம் அனைவரும் கடவுள் முன் சமமே என்று பலர்கூறக்கேட்டுள்ளோம், ஆனால் தற்போது கொரோனாவின் முன் அனைவரும் சமமே என்று கண்கூட கண்டுகொண்டோம். என்ன சாதி, என்ன மதம், என்ன மொழி, என்ன இனம், என்ன நாடு என்று பார்த்து வரவில்லை இந்த கொரோனா. அதற்கு தெரிந்திருக்கிறது நாம் அனைவரும் மனிதர்கள் என்று. பல்லாயிரம் ஆண்டுகளாக இறைவனாலும் ஒன்று படுத்தமுடியாத, பல்வேறு கூறுகளாக பிரிந்துகிடந்த மனித சமுதாயத்தை ஒரு சில நாட்களில் மாதங்களில் மனிதர்களிடையே எவ்வித வேறுபாடுகளும் வித்தியாசங்களும் இல்லை நாம் அனைவரும் ஒன்று தான் என்ற எண்ணத்தை மிக ஆழமாக பதித்திருக்கிறது இந்த கொரோனா. பொருளாதார முன்னேற்றம் மட்டுமே வாழ்க்கையின் வெற்றி என்ற அற்ப நம்பிக்கையில் உறவுகளின் உன்னதத்தை மறந்து, பெரியோரின் பண்புகளை மறந்து, படிப்பின் அடிப்படை நோக்கத்தை மறந்து, உற்ற நண்பர்களின் நட்பை மறந்து, நம்மை ஆளாக்கிய குடும்பத்தின் தியாகத்தை மறந்து, நாட்டை மறந்து எதனையும் விட எவரையும் விட பணம் என்ற ஒன்றே மிகவும முக்கியம் எனக்கருதி ஓடிக்கொண்டிருந்த நம் அனைவருக்கும் கன்னத்தில் அறைந்தாற்போல் உண்மையை உணரவைத்திருக்கிறது இந்த கொரோனா. இதுவரை நாம் அனைவருமே அலுவலகங்களுக்கோ, தொழிற்சாலைகளுக்கோ, பாடசாலைகளுக்கோ தொடர்ந்தாற்  போல ஒரு பத்து நாட்கள் விடுமுறையெடுத்தால் கூட இவ்வுலகமே நின்று போய்விடுவது போல வாழ்ந்து வந்தோம். நாம் அனைவரும் இவ்வுலகையே நாம் தான் தாங்கிக்கொண்டுள்ளதாகவும் நாம் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்றும் எண்ணம் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது மூன்று நான்கு மாதங்களாக எதுவும் நம்மால் நடப்பதில்லை, நடக்கும் நிகழ்வுகளின் ஒரு சிறிய துகளின் அளவே நமது செயல்பாடு என்று உணரவைத்திருக்கிறது இந்த கொரோனா.  பொருளாதார அளவில் பெரும்பான்மையான மக்களுக்கு இந்த கொரோனா மிகவும் கெடுதலையே செய்துள்ளது, ஆம் பணத்தின் மதிப்பீடு அளவில். ஆனால் பணத்தின் மீது மனிதன் கொண்டுள்ள அடிப்படை புரிதலை மிகவும் விளங்கிக்கொள்ள உறுதுணையாக விளங்கியுள்ளது இந்த கொரோனா என்றால் அது மிகையில்லை. இதுவரை எவ்வளவு இருந்தாலும் போதவில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த மனிதனின் மனதில் தற்போது நாம் நலமாக வாழ எவ்வளவு இருந்தால் போதுமானது என்ற எண்ணத்தை உருவாகியுள்ளது இந்த கொரோனா. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது நம் முன்னோர் வாக்கு. அவ்வுன்னதமான வாழ்விற்கு அடிப்படை வித்தாய் அமைந்துள்ளது இக்கொரோனா. எப்போதுமே எப்படி பணத்தை ஈட்டுவது ஈட்டிய பணத்தை எப்படி பெருக்குவது அப்பணத்தை கொண்டு எந்த வாகனம் வாங்கலாம் எவ்வளவு தங்கம் வாங்கலாம் எவ்வளவு நிலம் வாங்கலாம் எங்கே வீடு வாங்கலாம் இன்னும் என்னென்னவெல்லாம் வாங்கலாம் என்று சர்வகாலமும் எண்ணிக்கொண்டிருந்த நாம், கடந்த மூன்று நான்கு மாதங்களாக பொருளின் மீது கொண்டிருந்த அளவில்லா அவாவினை மறந்து நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற நம் முன்னோரின் மந்திர வார்த்தையை உணர்ந்து நம் உடலையும் உயிரையும் காக்கும் நற்செயல்களில் நமது முழு கவனத்தையும் செலுத்த தொடங்கிவிட்டோம். நம்மிடம் எவ்வளவு குறைவற்ற செல்வம் இருப்பினும் அது நம் உயிரை காக்க உதவாது என்ற மாபெரும் உண்மையை நமக்கு உணரச்செய்திருக்கிறது இக்கொரோனா. அதுமட்டுமல்லாமல் நாம் நலமாக இருந்தால் மட்டும் போதாது நமது அண்டை வீட்டாரும் எதிர் வீட்டாரும் அனைவரும் நலமாக இருந்தால் தான் நாமும் நலமாக இருக்க முடியும் என்ற மாபெரும் உண்மையை  உணர்த்தியிருக்கிறது இக்கொரோனா. ஏனெனில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுவது இக்கொரோனா. எனவே நம்மை சுற்றியுள்ளோர் நலமாக இருந்தால் மட்டும் தான் நாம் நலமாக இருக்க முடியும். எனவே இதுவரை தனக்காகவே சுயநலமாக இறைவனை வேண்டிக்கொண்டிருந்த மனிதனை தன்னை சுற்றியுள்ள அனைத்து மனிதர்களுக்காகவும் பொதுநலத்துடன் இறைவனை வழிபடசெய்துள்ளது இக்கொரோனா. மக்களிடையே இத்தகைய பல உன்னதமான மாற்றங்களை கொண்டு வந்துள்ள இக்கொரோனா உண்மையில் வரமா சாபமா, நீங்களே நீதிபதி. வாழ்க தமிழகம்!!!     வளர்க பாரதம்!!! க.நந்தகுமார்24/07/2020

Read More »

சீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது.

2018- ஜூன்,ஜூலை.. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பொருளாதார வர்த்தகப் போர்(Trade War) தொடக்கம். 2019-செப்டம்பர்..சீனா-அமெரிக்கா வர்த்தகப் போர் முற்றியது. 2019- அக்டோபர்..சீன அதிபர் இந்தியா வருகை.மகாபலிபுரம் ஜி ஜின் பிங்க்- மோடி பேச்சுவார்த்தை. 2019- டிசம்பர்..சீனாவில் வூகான் நகரில் கொரோனா தொற்று பரவல். 2020-பிப்ரவரி..அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை.மோடியுடன் பேச்சுவார்த்தை. 2020-மார்ச்..இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமல். 2020-மே..இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல் எல்லையில் பதற்றம். 2020 மே-ஜூன்-ஜூலை..இந்திய அரசின் …

Read More »

கொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்…

கொரொனா ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்திருக்கிறது கரூர் மாவட்டத்தில்…. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கொரொனா வேகமாக பரவி வரும் சூழலில் அரவக்குறிச்சி பஞ்சாயத்து குழுவினர் தொற்று பாதித்த நபர்கள் வசித்த தெருவை சுத்தம் செய்து, தெரு ஆரம்பமாகும் இடத்தில் கபசுரக் குடிநீர் மக்களுக்காக கொடுத்து வருகின்றனர். மேலும் அரவக்குறிச்சி ஜீவா நகர் பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சிறப்பாக செயல்படும் அரவக்குறிச்சி பஞ்சாயத்து குழுவினருக்கு …

Read More »

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம்

பொது மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி! “கொரோனா” தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை சித்த மரு திரு.வீரபபாபு தலைமையில் மிக சிறப்பாக செயல்படுத்திவருகிறார். 1.கட்டணம் : இல்லை (இலவசம்) 2.காலம்:5-7 நாட்கள். 3.சேர தேவையானவை : கொரோனாபாசிட்டிவ் என வந்த SMS அல்லது மெடிக்கல் ரிப்போர்ட், ஆதார் அட்டை. படுக்கை வசதி …

Read More »

ரங்கமலை குரங்குகளும் மயில்களும் மற்றும் லாக் டவுன்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சசி பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் ரங்கமலை அமைந்துள்ளது. கரூர், திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லையில் உள்ள இந்த மலையின் தென்பகுதி திண்டுக்கல் வனத்துறை மேற்பார்வையிலும், வடபகுதி கரூர் மாவட்ட வனத்துறை மேற்பார்வையிலும் உள்ளது. சுமார் ஆயிரத்து ஐநூறு அடி உயரம் கொண்ட இந்த ரங்கமலையை பசுமையான காடு நிறைந்த இயற்கை சூழப்பட்ட நிலையில் ரங்கமலை அமைந்துள்ளதுஇந்தப் பகுதியில் 1000 கணக்கான …

Read More »

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பாவா நகர் 1 ல் தார்ச்சாலை அமைக்கும் பணி…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பாவா நகரைச் சுற்றி வர தார்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த செயல் திறம்பட பாவா நகருக்கு கொண்டு வந்த பெருமை பாவா நகர் மக்களுக்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கும் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று பாவா நகருக்கு சாலை அமைக்கும் பணியை விரைவில் கொண்டு வந்தமைக்கு தமிழக அரசுக்கும் மற்றும் அரவக்குறிச்சி பஞ்சாயத்து அதிகாரிகளுக்கும் …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by