Monday , August 15 2022
Breaking News
Home / உலகம் / வலிமை அப்டேட் – மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!
Vsolve UK

வலிமை அப்டேட் – மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

ஜூலை மாதம் வலிமையின் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு, வலிமை படக்குழுவினர் புரமோஷன் பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளதாக சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும் என தெரியவந்துள்ளது.

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான கதைக்களத்தில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் ஹெச்.வினோத். அடுத்து அஜித்திடம் கதை சொல்லி, அவரது சம்மதத்தையும் பெற்றார். அந்த நேரத்தில் போனி கபூருக்கு படம் பண்ணித்தர வேண்டியிருந்ததால், இந்தி பிங்கின் தமிழ் ரீமேக்கில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டார். இயக்குநருக்கு ஏன் அலைய வேண்டும் என்று பிங்க் தமிழ் ரீமேக்கை இயக்கும் பொறுப்பை வினோத்திடம் அளித்தார். நேர்கொண்ட பார்வையாக அப்படம் வெளியானது. இதையடுத்து மீண்டும் போனி கபூர், அஜித், ஹெச்.வினோத் கூட்டணியில் வலிமை படத்தின் வேலைகளை தொடங்கப்பட்டது. தற்போது வலிமை படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் ஜூலை மாதம் வலிமையின் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு, வலிமை படக்குழுவினர் புரமோஷன் பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளதாக சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதன் மூலம் வலிமை அப்டேட் கேட்டு வலியுறுத்தி வரும் அஜித் ரசிகர்களுக்கு ஜூலை மாத இறுதியில் இருந்து அப்டேட் கிடைக்கும் எனத் தெரிகிறது.

Thanks to : news 18

Bala Trust

About Ramya Karur

Check Also

மதுரையில் மதர் ஹவுஸ் வெல்ஃபேர் டிரஸ்ட் சார்பாக 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.!

மை மதர் ஹவுஸ் வெல்ஃபேர் ட்ரஸ்ட்.75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் முப்பெரும் விழா மதுரை மாவட்டம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES