Sunday , August 14 2022
Breaking News
Home / உலகம் / மாமியாரை குத்திக்கொன்ற மருமகன் !!
Vsolve UK

மாமியாரை குத்திக்கொன்ற மருமகன் !!

மனைவி விவாகரத்து கேட்டு நிலையில் ராம்குமார் வந்து தகராறு செய்துள்ளார்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையை சமாதானம் செய்ய வந்த மாமியாரை குத்திக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகரில் வசித்து வருபவர் சங்கரநாரயணன் இவர் மகள் முனீஸ்வரி (25). இவர் வெம்பக்கோட்டை அருகே கட்டணச்செவல் கிராமத்தை சேர்ந்த ராம்குமாரை (27) என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.

ராம்குமார் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்ததுள்ளது. இதனால் முனீஸ்வரி கடந்த 6 மாதங்களாக ராம்குமாரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் முனீஸ்வரி சிலநாட்களுக்கு முன்பு ராம்குமாருக்கு விவகாரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கோபமடைந்த ராம்குமார் நேற்று இரவு சாத்தூர் அண்ணாநகரில் உள்ள முனீஸ்வரியின் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையை அருகில் இருந்த முனீஸ்வரியின் சித்தி மாரியம்மாள் (55) விலக்கியுள்ளார். அப்போது தான் வைத்திருந்த கத்தியால் ராம்குமார் மாரியம்மாளை குத்தியுள்ளார். இதில் மாரியம்மாள் இரத்தம் வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் நகர் காவல் துறையினர் உயிரிழந்த மாரியம்மாளின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த முனீஸ்வரி (25) அவருடைய அம்மா சந்திரா (58) சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளி ராம்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Thanks to : news 18

Bala Trust

About Ramya Karur

Check Also

பாஜகவில் இருந்து விலகுவதாக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் அறிவிப்பு

பாஜகவில் இருந்து விலகினார் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன்.நடந்த சம்பவத்திற்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இல்லத்திற்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES