Wednesday , August 10 2022
Breaking News
Home / உலகம் / கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட பிரபு சங்கர்.ஐ.ஏ.எஸ் பற்றிய சில தகவல்கள்…
Vsolve UK

கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட பிரபு சங்கர்.ஐ.ஏ.எஸ் பற்றிய சில தகவல்கள்…

கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட பிரபு சங்கர்.ஐ.ஏ.எஸ் பற்றிய சில தகவல்கள்…

கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட பிரபு சங்கர்.ஐ.ஏ.எஸ் பற்றிய சில தகவல்கள்
மதுரை மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு. சண்டிகரில் மருத்துவ முதுநிலை படிப்பு. அதன்பின் சென்னையில் மருத்துவராக பணிபுரிந்துகொண்டே ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி அதில் அகில இந்திய அளவில் 7 வது தரவரிசையில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்.
பொதுவாக ஐ.ஏ.எஸ் நேர்முகத்தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கு சராசரியாக இருபது நிமிடங்கள் முதல் முப்பது நிமிடங்கள்தான் நேர்காணல் நடைபெறும்
மிகச்சிறப்பாக பதிலளிப்பவர் எனில் இன்னும் ஒரு ஐந்து அல்லது பத்துநிமிடங்கள் கூடுதலாக நடக்கும். அதுவே பெரிய விசயம். ஏனெனில் எத்தனையோ நேர்முகத்தேர்வுகள் வெறும்
ஐந்து அல்லது பத்து நிமிடங்களிலெல்லாம் முடிந்துவிடுவதுண்டு. அனால் இவருக்கு நடந்த நேர்முகத்தேர்வு கிட்டதட்ட ஒருமணிநேரம். அந்த அளவுக்கு நன்கு திறமைசாலியாவார்.
நேர்முகத்தேர்வில் அவருக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா ? 220 மதிப்பெண்கள். ஐ.ஏ.எஸ் நேர்முகத்தேர்வில் 175 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தால் அது பெரிய விசயம் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரகாண்ட் மாநில முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பயிற்சிமையத்தில் சிறந்த பயிற்சி அதிகாரியாக தேர்ச்சி பெற்று சாதனை.
(1978 முதல் 2017 வரையிலான நாற்பதாண்டு கால வரலாற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த பாலாஜி மற்றும் பிரபு சங்கர் ஆகிய இருவர் மட்டுமே சிறந்த பயிற்சி அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிபிடத்தக்கது.
சார் ஆட்சியராக செஞ்சியில் பொறுப்பேற்றவுடன் அப்துல் கலாம் கனவுத்திட்டமான PURA திட்டத்திற்கு உயிர்கொடுக்கும் ஒரு முன்னெடுப்பாக இருளர் பழங்குடியினருக்காக அமைக்கப்பட்ட நிலையான நீடித்த வளர்ச்சிக்கான நவீன
கட்டமைப்புகளுடன் கூடிய ஸ்மார்ட் காலனியை (First of its kind in India) உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.
அதே செஞ்சியில் கோவிலில் நுழைவதற்கு தலித்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நூறாண்டு தடையை உடைப்பதில் தீவிர கவனம் செலுத்தி இரு தரப்பினர்களுக்கிடையே ஜாதிக்கலவரம் எதுவும் நிகழ்ந்துவிடாமல் சுமூகமான முறையில் அனைவரும் கோவிலுக்குள் சென்று வழிபடும் வகையில் செயல்பட்டதால் ‘புதிய வைக்கம் வீரர்’ என்று அந்த பகுதி மக்களால் அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர்.
கடந்த நூற்றாண்டுகளில் சென்னை சந்தித்திராத கடுமையான தண்ணீர் பஞ்சத்தை 2018-19 இல் சந்தித்தபோது (தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனுக்கு இணையான பஞ்சம் என்றும் ‘இந்தியாவின் கேப்டவுன்’ சென்னை என்றும் பத்திரிக்கைகளால் வர்ணிக்கப்பட்டது.) சென்னை மெட்ரோ வாட்டர் செயல் இயக்குநராக பொறுப்பேற்றவுடன்
பம்பரமாக சுழன்று அனைத்து தரப்பினர் பாராட்டையும் பெற்றவர்.
தற்போது கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மக்களுக்காக சேவை செய்து மக்களின் அதிகாரியாக அனைவரின் மனதிலும் என்றென்றும் ஆட்சி செய்ய வாழ்த்துக்கள் .

Bala Trust

About Ramya Karur

Check Also

மதுரையில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிடக்கலைஞர்கள் கலந்தாய்வு கூட்டம்.

மதுரை கரிசல்குளம் பகுதியில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிட கலைஞர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆரப்பாளையம் சூர்யா …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES