ஆண்டுதோறும் நான்கு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
குடியரசு தினமான நாளை, கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கிராம சபை கூட்டங்களை நடத்தக் கூடாது என ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த சுற்றறிக்கையை ஊரக வளர்ச்சித்துறை அனுப்பப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நான்கு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கூட்டம் நடத்தப்படும்.
இந்நிலையில், கொரோனாவை காரணமாக கடந்த ஆண்டு குடியரசு தினம் தவிர வேறு தினங்களில் சிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
திமுகவும், மக்கள் நீதி மய்யமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கில், குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்துவது பற்றி சில நாட்களில் முடிவு செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks to: news 18