Monday , August 15 2022
Breaking News
Home / தமிழகம் / சசிகலா தானாக உணவு உட்கொள்கிறார்; உடல்நிலையில் முன்னேற்றம்…
Vsolve UK

சசிகலா தானாக உணவு உட்கொள்கிறார்; உடல்நிலையில் முன்னேற்றம்…

சசிகலா தானாக உணவு உட்கொள்கிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தண்டனை காலம் முடிந்து இம்மாதம் 27-ம் தேதி விடுதலையாக உள்ளார். கடந்த ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்த நிலையில் அவருக்கு புதன்கிழமை மாலை 3 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஏற்கனவே சர்க்கரை, தைராய்டு பிரச்னைகளால் அவதிப்பட்ட சசிகலாவுக்கு ஆக்ஸிஜன் அளவு இயல்பைவிட குறைவானதால், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் இரவு 7 மணியளவில் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக ஆன்டிஜென் எனப்படும் விரைவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சசிகலாவுக்கு தொற்று இல்லை என தெரியவந்தது. அதன்பிறகு ஆர்.டி பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டது. சசிகலாவுக்கு சுவாச கருவி பொறுத்தி சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், திடீரென நள்ளிரவில் அவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆர்.டி. பி.சி.ஆர் சோதனையில் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

அதனையடுத்து, சசிகலா, விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றவேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கைவிடுத்தனர். சிறைத்துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்த நிலையில், விக்டோரியா மருந்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள சசிகலா விரும்பினார். தொடர்ந்து 10 நாட்கள் சிகிச்சை இருக்கும் அதன் பிறகு வீட்டு தனிமைக்கு அனுப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் உடல்நிலையை பொருத்துதான் முடிவு எடுக்க முடியும். சசிகலாவின் நுரையீரல் தொற்று கட்டுக்குள் உள்ளது.

இந்தநிலையில், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ’ஆக்ஸிஜன் அளவு சீராக உள்ளது. நேற்று வரை 10 லிட்டர் அழுத்தம் கொண்ட ஆக்ஸிஐன் செலுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று 5 லிட்டர் அழுத்தம் கொண்ட ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தானாக உணவு உட்கொள்கிறார் சசிகலா. கொரோனாவிற்கான அறிகுறிகள் குறைந்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks to : news 18

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES