Wednesday , August 17 2022
Breaking News
Home / கல்வி / பழைய பாஸ் இருந்தால் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்..
Vsolve UK

பழைய பாஸ் இருந்தால் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்..

சீருடை, பழைய பாஸ் இருந்தால் பள்ளி மாணவர்கள் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், மாணவர்கள் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மின்சார பேருந்து போக்குவரத்து திட்டம் எந்த வகையிலும் கைவிடப்படாது. கொரோனா காலத்தில் கடந்த மாதங்களில் அதற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு ‘பார்ம்-2’ என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதில் மின்சார பேருந்துகளுக்கு மானியம் கொடுத்தார்கள். இப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் நாட்டிலேயே முதல் முறையாக சி40 என்ற ஒப்பந்தத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி ஜெர்மன் ‘கே.எப்.டபுள்யூ.’ வங்கியில் இருந்து கடன் உதவி பெற்று மின்சார பேருந்து போக்குவரத்தும், பி.எஸ்.-6 ரக பேருந்துகளும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன. மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

மேலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பஸ் பாஸ் வைத்திருந்தால் போதும். அவர்கள் கட்டணமின்றி இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.

Thanks to : news 18

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES