நடிகர் ரஜினியிடம் தான் நண்பர் என்ற முறையில் ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று புதுக்கோட்டையில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரஜினியை சென்னை சென்ற பிறகு சந்திப்பேன். அவர் நலனை விசரிப்பேன். அவர்களின் நலனில் அக்கறை கொள்வதில் நானும் ஒருவன். மேலும் கூட்டணி குறித்து அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது என் நண்பரான ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன். அரசியல் பயணம் ரஜினி அவர் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாக இருக்குமே ஆனால் அதை நான் வரவேற்கின்றேன்
சிறுமி பாலியல் வழக்கு குறித்து பேசிய கமல் மரண தண்டனைக்கு நான் எதிரானவன் இன்னொரு உயிரை எடுப்பதால் சரி ஆகிவிடாது பெண் குழந்தைகளை சூழ்நிலைக்கு ஏற்றவாறு அறிவுரை கூறி பெற்றோர்கள் வளர்க்கவேண்டும். அரசியலில் நேர்மையாக இருக்க முடியும் என்பதை எனது கல்லறையைப் பார்த்து அனைவரும் தெரிந்து கொள்வார்கள்
வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஜனவரியில் கூட்டணி அறிவிக்கப்படும்.மேலும் எனது தலைமையில் கூட்டணி அமைக்கவேண்டும் என்பது மக்கள் நீதி மய்யம் ஆசை. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நான் போட்டியிடுவேன். திராவிடம் என்பது அனைவருக்கும் சொந்தம். அதை இரண்டு பேருக்கு மட்டும் பிரித்து கொடுக்கவில்லை திராவிடம் என்பது அனைவருக்கும் சொந்தம்.
மக்கள் நீதி மய்யம் ஆசை மற்றும் என்னுடைய ஆசையும் அரசியலுக்கு வருவதென்று ஒரு நேரம் இருக்கின்றது அவசியம் இருக்கின்றது. அரசு தடை செய்த படத்தை நீதிமன்றத்தின் மூலம் உத்தரவு பெற்று வெளியிடப்பட்டது. இதனால் அரசுக்கு பணிந்து போகிறார் கமலஹாசன் என்பது தவறான கருத்து“ என்றார்.
Thanks to : news 18