அமெரிக்காவில் கொரோனா தொற்று நிலவரம் மேம்படுவதற்கு முன் அது மேலும் மோசமடையக் கூடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா வைரஸ் குறித்த தகவல்களைத் தரும் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்த டிரம்ப், நேற்று மீண்டும் அத்தகைய செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது முதன்முறையாக மக்களை முக கவசம் அணியுமாறு அவர் கேட்டுக் கொண்டார். அமெரிக்காவில் தொற்று நிலவரம் மேம்படுவதற்கு முன் மேலும் மோசமடையக் கூடும் என்றும் டிரம்ப் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
thanks to news 18