லடாக்: பாகிஸ்தானில் சீனாவின் போர் விமானங்கள் களமிறக்கப்பட்டு வருவதால் இந்தியா தனது எல்லையில் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தனது கவனத்தை திருப்பி உள்ளது. இந்தியா – சீனா இடையே எல்லையில் தீவிரமான மோதல் நிகழ்த்து வருகிறது. பெரிய நெருப்புக்கு முன் வரும் புகை போல இரண்டு நாடுகளும் தற்போது அமைதியாக எல்லையில் படைகளை குவித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இந்த புகை காட்டுத்தீயாக மாறலாம் . இந்த சூடான புகையில் தற்போது பாகிஸ்தான் குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறது. இந்த மோதலை பயன்படுத்தி காஷ்மீரில் வேலையை காட்ட பாகிஸ்தான் தீவிரமாக முயன்று வருகிறது. கடந்த சில தினங்களாகவே பாகிஸ்தான் காஷ்மீரில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.
என்ன மாதிரியான திட்டம் இந்த நிலையில்தான் தற்போது பாகிஸ்தானில் சீனாவின் போர் விமானங்கள் களமிறக்கப்பட்டு உள்ளது. கடந்த வாரத்தில் இருந்து சீனாவின் போர் விமானங்கள் பாகிஸ்தானில் களமிறங்கி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள ஸ்கர்டு பகுதியில் உள்ள விமான படைத்தளத்தில் சீனாவின் விமானங்கள் களமிறக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்கும் காஷ்மீர் பகுதியில் இருந்து இந்த இடம் மிக சொற்ப தூரத்திலேயே இருக்கிறது.
வேறு எங்கு அதேபோல் லடாக்கில் இன்னொரு பக்கத்திலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்கும் காஷ்மீரின் வான் பகுதியிலும், சீனா ஆக்கிரமித்து இருக்கும் லடாக்கின் வான் பகுதியிலும் சீனாவின் போர் விமானங்கள் தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது. பாகிஸ்தானின் விமான பரப்பை சீனாவின் போர் விமானங்கள் பயன்படுத்திக் கொண்டு அங்கே ரோந்து பணிகளை செய்து வருகிறது. இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சீனாவிற்கு துணை போய் உள்ளது.
படைகள் குவிப்பு
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானுக்குள் சீனாவின் படைகளும் களமிறக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் லடாக்கில் கவனம் செலுத்தும் சீனா இன்னொரு பக்கம் பாகிஸ்தான் உதவியோடு காஷ்மீரிலும் அத்துமீற நினைக்கிறது. லடாக் அருகே இருக்கும் சீனாவின் ஹோட்டான் விமான படைத்தளத்தில் இந்த வாரம் மட்டும் 27 சுகோய் விமானங்களை சீனா களமிறக்கி உள்ளது.
திபெத் அருகே
அதேபோல் திபெத் எல்லையில் சீனா தனது போர் விமானங்களை வைத்து மிக தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது. பாகிஸ்தானின் ஸ்கர்டு விமானப்படை தளம் என்பது பாகிஸ்தான் கீழ் வரும் லே அருகே உள்ள இன்னொரு விமானப்படை தளத்தில் இருந்து 100 கிமீ தொலைவில்தான் இருக்கிறது. இந்த விமானப்படை தளத்திலும் சீனா தனது போர் விமானங்களை களமிறக்கி உள்ளது.
Thanks to: One india tamil