Monday , August 15 2022
Breaking News
Home / கரூர் / பூமி பூஜை – தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!
Vsolve UK

பூமி பூஜை – தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியில் அமராவதி ஆற்றில் 148.20 கிலோமீட்டரில் உள்ள சின்னதாராபுரம் அணைக்கட்டிலிருந்து பிரியும் சின்னதாராபுரம் வாய்க்காலை 25 லட்சம் மதிப்பீட்டில் முட்புதர்களை அகற்றி, வெள்ள தடுப்புச் சுவர் கட்டுதல் போன்ற பணிகளுக்கான பூமி பூஜை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்
விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த வாய்க்காலில் 123 மீட்டர் நீளத்திற்கு வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுதல், 3 ஆயிரத்து 350 மீட்டர் தூரத்திற்கு முட்புதர்களை அகற்றுதல் போன்ற பணிகள் நடைபெறுவதால் ஆயிரத்து 877 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக கரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கொரோனா நுண்கிருமி தொற்று பரவாமல் தடுப்பதற்கு தேவையான பாதுகாப்பு பொருட்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

மேலும் தொழிலாளர் நலத்துறை சார்பாக, பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை அளித்தார்.

Thanks To: Samayam

Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES