அதிகாலையில் கரூர் நகராட்சி பகுதி பொதுமக்களை சந்தித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சாக்கடை வடிகால், சாலை வசதி, குடீநீர் பிரச்சினைகள் குறித்து வீதி வீதியாக சென்று நேரில் ஆய்வு



இன்று காலை 6:30 மணிக்கு கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் கரூர் மாவட்டக் கழக ஆற்றல்மிகு செயலாளர் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் ஒவ்வொரு வார்டாக வீதி வீதியாகசென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அப்பகுதியில் சாக்கடை வசதிகள், குடி நீர் பிரச்சினை, சாலை வசதிகள், தெரு விளக்கு, உள்ளிட்ட பல்வேறு குறை நிறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மாண்புமிகு அமைச்சரின் இந்த நடவடிக்கையால் நகராட்சி பகுதி பொதுமக்கள் உற்சாகத்துடன் மாண்புமிகு் அமைச்சரிடம் தங்களது குறைநிறைகளை தெரியப்படுத்தி வருகின்றனர்.