Wednesday , August 10 2022
Breaking News
Home / கரூர் / கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் முக்கிய அறிவிப்பு….
Vsolve UK

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் முக்கிய அறிவிப்பு….

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வணிக நிறுவனங்கள், மளிகைக்கடைகள், வியாபாரத்தளங்கள் உள்ளிட்டவைகள் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே செயல்படும் – கொரேனா தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன்.இஆப., அவர்கள் அறிவிப்பு

அதன் விபரம் வருமாறு:

கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் அறிவுரையின்படி கொரோனா தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்துவகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றது.

கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளாக கருதப்படும் வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாது,   பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், பொது இடங்களுக்குச் செல்லும்போது சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்றும்  தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. 

இருந்தபோதிலும், கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சமூக விலகலைக் கடைபிடிக்காமல் கொரோனா தொற்று பரவும் சூழலை உருவாக்கும் வகையில் நடந்து கொள்வதால், நாளை (21.06.2020) முதல் கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் ஜவுளிக்கடை, நகைக்கடை, வணிக நிறுவனங்கள், மளிகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான வியாபாரத்தளங்களும் மதியம் இரண்டு மணிவரை மட்டுமே செயல்படவேண்டும். இரண்டு மணிக்கு மேல் எந்தவிதமாக கடைகளும் திறந்திருக்கக் கூடாது என்று அறிவிக்கப்படுகின்றது.

வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்தி, சமூக விலகல் கடைபிடிக்கப்படாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். முகக்கவசம் அணியாமல் வெளியில் வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் ஒத்துழைப்பில்லாமல் கொரேனா தொற்று பரவலை தடுப்பது மிகவும் சிரமமானதாகும். எனவே, தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Bala Trust

About Veetri Rajkumar

Check Also

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES