சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 2396 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதிப்பு 56845 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் தினமும் 2000+ கேஸ்கள் தமிழகத்தில் வர தொடங்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்றுதான் தமிழகத்தில் அதிகமாக கேஸ்கள் வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது.
இன்று கேஸ்கள் தமிழகத்தில் இன்று புதிதாக 2396 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதிப்பு 56845 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1254 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 24822 ஆக உள்ளது.
சென்னை நிலை
சென்னையில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 39641 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள் தமிழகத்தில் மொத்தமாக 31316 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் சென்னையில் மொத்தம் 17285 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.
எத்தனை பலி எண்ணிக்கை
தமிழகத்தில் இன்று 38 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 704 ஆக உள்ளது. தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் 1.2% ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்தமாக 559 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் அதிகரித்து வருகிறது. இறப்பு சதவிகிதம் குறைவாக இருந்த நிலையில், தற்போது தினமும் அது அதிகரிக்க தொடங்கி உள்ளது
எத்தனை சோதனை
தமிழகத்தில் இன்று 33231 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 861211 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுதான் அதிகமாக கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 32186 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 821594 பேருக்கு இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
Thanks TO: one india tamil